பொது இடத்தில் மது அருந்தியதை தட்டிக்கேட்ட போலீஸ் ஏட்டை தாக்க முயன்றதாக 2 பேர் கைது
மேலூர் அருகே கீழவளவு வீரகாளியம்மன் கோவில் விழாவையொட்டி வாச்சாம்பட்டியில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது.
மேலூர்,
மேலூர் அருகே கீழவளவு வீரகாளியம்மன் கோவில் விழாவையொட்டி வாச்சாம்பட்டியில் இன்னிசை கச்சேரி நடைபெற்றது. அப்போது அங்கு 2 பேர் மது அருந்திக் கொண்டிருந்தனர். உடனே பாதுகாப்பு பணியில் இருந்த கீழவளவு போலீஸ் ஏட்டு ராமு பொது இடத்தில் மது அருந்தக் கூடாது என்று கண்டித்துள்ளார். அதற்கு அவர்கள் ஏட்டு ராமுவை ஆபாசமாக பேசி தாக்க முயன்றுள்ளனர். இது குறித்து தகவல் அறிந்த போலீசார் விரைந்து வந்து அந்த இருவரையும் பிடித்து போலீஸ் நிலையத்துக்கு கொண்டு சென்றனர். விசாரணையில் அவர்கள் மம்மானிபட்டியைச் சேர்ந்த பாண்டித்துரை (வயது 25), ஏ.கல்லம்பட்டியைச் சேர்ந்த பாலமுருகன் (28) என்பது தெரிய வந்தது. போலீஸ் ஏட்டு அளித்த புகாரின் பேரில் அவர்கள் இருவரும் கைது செய்யப்பட்டனர்.