‘ஒகி’ புயலால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும்
குமரி மாவட்டத்தில் புயலால் வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்று விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் கூறினார்.
நாகர்கோவில்,
‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட குமரி மாவட்டத்தை தேசிய பேரிடர் பகுதி என்று அறிவிக்க வேண்டும், கடலில் காணாமல் போன மீனவர்களை தேடி விரைந்து கண்டுபிடிக்க வேண்டும், வாழ்வாதாரத்தை இழந்த விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி குமரி மாவட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சி சார்பில் நாகர்கோவில் கலெக்டர் அலுவலகம் முன் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் தொல்.திருமாவளவன் தலைமை தாங்கி பேசினார். மாவட்ட செயலாளர் திருமாவேந்தன், இந்திய கம்யூனிஸ்டு மாவட்ட செயலாளர் இசக்கிமுத்து, மனிதநேய மக்கள் கட்சி நிர்வாகி சாதிக், எஸ்.டி.பி.ஐ. கட்சி மாவட்ட தலைவர் சுல்பிகர் அலி உள்பட திரளானோர் கலந்துகொண்டனர்.
முன்னதாக தொல்.திருமாவளவன் நிருபர்களிடம் கூறியதாவது:–
‘ஒகி‘ புயல் குமரி மாவட்டத்துக்கு மிகப்பெரிய பாதிப்பை ஏற்படுத்தி இருக்கிறது. எனவே தேசிய பேரிடர் பகுதியாக குமரி மாவட்டத்தை அறிவிக்க வேண்டும். இதுதொடர்பாக அனைத்து அரசியல் கட்சியினரும் கோரிக்கை விடுத்துள்ளனர். இந்த கோரிக்கைகளை மத்திய அரசு பரிசீலிக்க வேண்டும்.
புயலால் தேக்கு, வாழை, தென்னை போன்ற பயிர்கள் பெரும் சேதம் அடைந்துள்ளன. இதனால் விவசாயிகள் வாழ்வாதாரங்களை இழந்துள்ளனர். எனவே சேதத்தை விரைந்து கணக்கிட்டு பாதிக்கப்பட்டுள்ள விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும். புயலில் சிக்கி மீனவர்கள் பலியான சம்பவம் வேதனைக்குரியது.
பலியான மீனவர்களின் குடும்பத்துக்கு ரூ.20 லட்சம் இழப்பீடு வழங்கப்படும் என்று முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமி அறிவித்து இருக்கிறார். ஆனால் இழப்பீடு தொகையை ரூ.50 லட்சமாக உயர்த்தி வழங்க வேண்டும். மாயமாகும் மீனவர்களை உடனே மீட்க வசதியாக 24 மணி நேரமும் தயார் நிலையில் இருக்கும் வகையில் கப்பல் வசதி ஏற்படுத்த வேண்டும். மேலும், கடலுக்கு மீன்பிடிக்க செல்லும் மீனவர்களுக்கு நவீன தொழில்நுட்ப சாதனங்கள் வழங்க வேண்டும்.
கேரளாவில் ஏற்பட்ட புயல் சேதத்துக்கு ரூ.2 ஆயிரம் கோடி நிவாரணம் வழங்க வேண்டும் என்று கேரள முதல்–மந்திரி பினராயி விஜயன் பிரதமர் நரேந்திரமோடியை சந்தித்து கேட்டுள்ளார். இதுபோல் தமிழக முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியும் பிரதமரை சந்தித்து நிவாரணம் கோர வேண்டும்.
இடைத்தேர்தல் என்றாலே ஆளும் கட்சிதான் வெற்றி பெறும். ஆனால் தற்போது ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் எதிர்க்கட்சி தி.மு.க. வெற்றி பெறக்கூடிய சூழல் ஏற்பட்டு உள்ளது. இதனால் வீடுகளுக்கு பணப்பட்டுவாடா செய்து தேர்தலை நிறுத்தும் முயற்சி நடக்கிறது. ஆர்.கே.நகர் தொகுதியில் இடைத்தேர்தல் நடக்குமா? என்பது சந்தேகமாக உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.