தக்கலையில் தி.மு.க.–காங்கிரஸ் உண்ணாவிரத போராட்டம்

‘ஒகி‘ புயலால் பாதிக்கப்பட்ட குமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தி தக்கலையில் தி.மு.க.–காங்கிரஸ் கட்சியினர் உண்ணாவிரத போராட்டம் நடத்தினார்கள்.

Update: 2017-12-13 22:45 GMT
தக்கலை,

‘ஒகி‘ புயல் தாக்கியதில் குமரி மாவட்டம் முழுவதும் ஏராளமான மரங்கள், மின்கம்பங்கள் சாய்ந்தன. வாழை, தென்னை, நெல் உள்ளிட்ட ஏராளமான பயிர்கள் நாசமடைந்தன.

குமரியை தேசிய பேரிடர் மாவட்டமாக அறிவிக்க வலியுறுத்தியும், புயலால் பாதிக்கப்பட்ட விவசாயிகளுக்கு உரிய நிவாரணம் வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தக்கலையில் தி.மு.க.–காங்கிரஸ் சார்பில் உண்ணாவிரத போராட்டம் நடந்தது.

தி.மு.க.– காங்கிரஸ் நிர்வாகிகள்

இதற்கு முன்னாள் அமைச்சர் லாரன்ஸ் தலைமை தாங்கினார். விஜயதரணி எம்.எல்.ஏ. போராட்டத்தை தொடங்கி வைத்தார்.

 இதில் பத்மநாபபுரம் காங்கிரஸ் நகர தலைவர் ஹனுகுமார், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் புஷ்பலீலா ஆல்பன், ராஜரத்தினம், மாவட்ட அவைத்தலைவர் பப்புசன், மாநில சட்டத்துறை துணை செயலாளர் தினேஷ், பத்மநாபபுரம் தி.மு.க. நகர செயலாளர் மணி உள்பட ஏராளமானோர் கலந்துகொண்டனர்.

மேலும் செய்திகள்