மணல் கடத்தியதாக டிராக்டர், சரக்கு ஆட்டோ பறிமுதல்
பவானி அருகே மணல் கடத்தியதாக டிராக்டர், சரக்கு ஆட்டோ பறிமுதல் செய்யப்பட்டது. கடத்தலை தடுக்க அகழி அமைக்கும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
பவானி,
பவானி ஆற்றங்கரையில் தொடர் மணல் திருட்டு நடப்பதாக மாவட்ட நிர்வாகத்துக்கு புகார் வந்தது. அதைத்தொடர்ந்து மணல் திருட்டை தடுக்க கலெக்டர் உத்தரவின்படி பவானி தாசில்தார் மற்றும் வருவாய்த்துறை அதிகாரிகள் பகல் இரவாக கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வந்தார்கள்.
அப்போது பவானி அருகே உள்ள சேர்வராயன்பாளையம், பெரியமோளபாளையம், சின்னமோளபாளையம், ஒரிச்சேரிபுதூர், ஜம்பை, தளவாய்பேட்டை ஆகிய பகுதிகளில் உள்ள பவானி ஆற்றின் நடுவே கொப்பரைகள் வைத்து மணல் கடத்தி சலித்து விற்பனை செய்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து வருவாய்த்துறையினர் ஒரிச்சேரிபுதூர், ஜம்பை பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுத்தனர்.
அகழி அமைக்கும் பணி
இதுகுறித்து வருவாய்த்துறையினர் கூறும்போது, ‘ஒரிச்சேரிப்புதூர், ஜம்பை பகுதியில் மணல் திருட்டை தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து தற்போது சிமெண்ட் சாக்கு மூட்டைகளில் மணல் நிரப்பி இருசக்கர வாகனத்தில் வைத்து கொண்டு மணல் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இதை தடுக்க சேர்வராயன்பாளையம் ஆற்றங்கரையோரம் 100 அடி நீளம், 5 அடி ஆழம், 6 அடி அகலத்தில் பொக்லைன் எந்திரம் மூலம் அகழி தோண்டும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
நேற்று முன்தினம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 40 மணல் மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன. இதேபோல் கடந்த ஒரு மாதமாக பவானி மற்றும் சுற்றுவட்டார பகுதியில் உள்ள பவானி ஆற்றங்கரையோரம் விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த 400-க்கும் மேற்பட்ட மணல் மூட்டைகள் கண்டுபிடிக்கப்பட்டு பறிமுதல் செய்யப்பட்டது. மணல் கடத்தலை தடுக்க அந்தந்த பகுதி பொதுமக்களும் ஒத்துழைப்பு தர வேண்டும்.’ என்றனர்.
2 வாகனங்கள் பறிமுதல்
இதற்கிடையே பவானி அருகே உள்ள வைரமங்கலம் பகுதியில் இருந்து டிராக்டரில் மணல் கடத்துவதாக பவானி தாசில்தார் சிவகாமிக்கு தகவல் கிடைத்தது. அதைத்தொடர்ந்து கிராம நிர்வாக அதிகாரி செந்தில்ராஜ் மற்றும் வருவாய்த்துறையினர் அங்கு ஜீப்பில் சென்று டிராக்டரை தடுத்து நிறுத்தி னார்கள். உடனே டிரைவர் டிராக்டரில் இருந்து தப்பி ஓடிவிட்டார் பின்னர் டிராக்டரை அதிகாரிகள் சோதனை செய்தபோது அதில் மணல் கடத்தப்பட்டு இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதைத்தொடர்ந்து மணலுடன் டிராக்டரை அதிகாரிகள் பறிமுதல் செய்தார்கள்.
இதேபோல் ஜம்பை பவானி ஆற்றில் இருந்து சரக்கு ஆட்டோவில் மணல் கடத்துவதாக வருவாய்த்துறை அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்தது. இதைத்தொடர்ந்து அதிகாரிகள் அங்கு விரைந்து சென்றார்கள். அதிகாரிகளை பார்த்ததும் சரக்கு ஆட்டோ டிரைவர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டார். இதையடுத்து அதிகாரிகள் மணல் கடத்தியதாக சரக்கு ஆட்டோவையும், அதற்கு பயன்படுத்தப்பட்ட கொப்பரை, சிமெண்ட் சட்டி, சல்லடை, சாக்குப்பை ஆகியவற்றையும் பறிமுதல் செய்தார்கள். இவை பவானி தாலுகா அலுவலகத்துக்கு கொண்டு செல்லப்பட்டது.