மராட்டிய மேல்–சபை தேர்தலில் வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்த வேண்டும்

மராட்டிய மேல்–சபையில் காலியான ஒரு இடத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. இதில், பாரதீய ஜனதா வேட்பாளர் பிரசாத் லாட் வெற்றி பெற்றார்.;

Update: 2017-12-12 23:56 GMT

நாக்பூர்,

மராட்டிய மேல்–சபையில் காலியான ஒரு இடத்துக்கு கடந்த வாரம் தேர்தல் நடைபெற்றது. இதில், பாரதீய ஜனதா வேட்பாளர் பிரசாத் லாட் வெற்றி பெற்றார். ரகசிய வாக்கெடுப்பு முறையில் நடைபெற்ற இத்தேர்தலில், சட்டசபையில் பாரதீய ஜனதா, சிவசேனா கட்சிகளின் பலத்தையும் தாண்டி, பிரசாத் லாட்டுக்கு கூடுதலாக 25 வாக்குகள் பதிவாகி இருந்தது அரசியல் அரங்கில் சலசலப்பை ஏற்படுத்தியது.

இதுபற்றி காங்கிரஸ் மூத்த தலைவர் பிரிதிவிராஜ் சவான் நேற்று நாக்பூரில் நிருபர்களிடம் பேசுகையில், ‘‘ரகசிய வாக்கெடுப்பில், முறைகேடுகள் நடைபெற சாத்தியம் இருக்கிறது. ஆகையால், மேல்–சபைக்கு வெளிப்படையான வாக்கெடுப்பு நடத்த வேண்டும். அப்போது தான் பணபலம் தாக்கத்தை ஏற்படுத்தாது’’ என்றார்.

மேலும் செய்திகள்