அரசு பள்ளியில் மாணவிக்கு பாலியல் தொல்லையா? ஆசிரியருக்கு சரமாரி அடி-உதை
சேலம் அருகே பள்ளி மாணவிக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறி கணித ஆசிரியருக்கு சரமாரி அடி-உதை விழுந்தது. அவரை போலீசார் மீட்டு விசாரணை நடத்தி வருகிறார்கள்.
கருப்பூர்,
சேலம் அருகே கோட்டக்கவுண்டம்பட்டியில் அரசு உயர்நிலைப்பள்ளி உள்ளது. இந்த பள்ளியில் கோட்டக்கவுண்டம்பட்டி மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களை சேர்ந்த 400 மாணவ-மாணவிகள் கல்வி பயின்று வருகிறார்கள். இந்த பள்ளியில் 15 ஆசிரியர், ஆசிரியைகள் பணியாற்றி வருகின்றனர். அவர்களில் கணித ஆசிரியராக பணியாற்றி வருபவர் முருகன்.
இவர், அப்பள்ளியில் 8-ம் வகுப்பு படித்து வரும் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து அந்த மாணவி, வீட்டிற்கு சென்று தனது பெற்றோரிடம் கூறி கதறி அழுதாள்.
ஆசிரியருக்கு சரமாரி அடி உதை
இதனால் மாணவியின் பெற்றோர், சகோதரர் மற்றும் உறவினர்கள் பள்ளிக்கு திரண்டு வந்தனர். வகுப்பறையில் இருந்த ஆசிரியர் முருகனை அவர்கள் சரமாரியாக அடித்து உதைத்தனர். இந்த தாக்குதலில் ஆசிரியர் முருகனுக்கு ரத்த காயம் ஏற்பட்டது. அவர்களின் பிடியில் இருந்து அவரால் தப்பமுடியவில்லை. விவரம் தெரியாத பிற ஆசிரியர்கள் கூச்சலிட்டனர்.
சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் அங்கு ஓடி வந்தனர். மேலும் கிராமமக்கள் அனைவரும் பள்ளி முன்பு திரண்டனர். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. பின்னர் உடனடியாக சேலம் சூரமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. உதவி போலீஸ் கமிஷனர் செல்வராஜன், சூரமங்கலம் போலீஸ் இன்ஸ்பெக்டர் செந்தில்குமார் மற்றும் போலீசார் அங்கு விரைந்து வந்தனர்.
ஆசிரியர் மீட்பு
பின்னர், ஆசிரியர் முருகனை போலீசார் மீட்டு ஜீப்பில் ஏற்றினர். பின்னர் போலீசார் இருதரப்பிலும் விசாரணை நடத்தினர். அப்போது பெற்றோர் தரப்பில் கூறுகையில்,“பள்ளியில் படித்து வரும் மகளுக்கு பாலியல் தொல்லை கொடுத்ததால், ஆசிரியரை அடித்து உதைத்தோம்” என்றனர்.
ஆனால், ஆசிரியர் முருகன் கூறுகையில், “அந்த மாணவிக்கு படிப்பு தொடர்பான சந்தேகங்களுக்கு விளக்கமும் அறிவுரையும்தான் வழங்கினேன். என்னை தவறாக புரிந்து கொண்டு தாக்கி விட்டனர்” என்றார்.
மகளிர் போலீசார் விசாரணை
அதைத்தொடர்ந்து ஆசிரியர் முருகன் மற்றும் மாணவியின் பெற்றோர் சூரமங்கலம் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். அங்கு அவர்களிடம் மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் வளர்மதி விசாரித்தார். இந்த விசாரணையில், மாணவி சரிவர படிக்கவில்லை என்பதால் அவரை கண்டித்து அறிவுரை வழங்கியதாக ஆசிரியர் முருகன் தெரிவித்துள்ளார். மேலும், கல்வித்துறை அதிகாரிகளும் நடந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.