வீடியோ பூட்டு
கதவில் பொருத்திக் கொள்ளக்கூடிய ஸ்மார்ட் வீடியோ பூட்டு இது.
வீடியோ டோர் பெல் மற்றும் பூட்டு, செல்போன் அப்ளிகேசன் மூன்றும் இணைந்த கலவை இது. வீட்டுக்கு வந்திருப்பவர்களுடன் வீடியோ உரையாடல் செய்யவும், எங்கிருந்த நிலையிலும் கதவைத் திறந்து அவர்களை உள்ளே அனுமதிக்கவும் முடியும். நாம் இல்லாத நேரத்தில் அவர்களை அனுமதிப்பதற்காக ஒன்டைம் பாஸ்வேர்டையும் கொடுத்து பயன்படுத்தலாம். ‘கேட் ஸ்மார்ட் லாக்’கின் விலை 349 அமெரிக்க டாலர்கள்.