கச்சிதமான உடையை தேர்வு செய்ய...

ஆன்லைனில் வாங்கும் ஆடைகள் ‘சைஸ்’ பொருந்தாமல் அவதிப்பட்டவர்களின் கஷ்டத்தை போக்குகிறது ‘ஜூஜூசூட் (ZOZOSuit) ’ அப்ளிகேசன்.

Update: 2017-12-12 07:56 GMT
டைகளை ஆன்லைனில் ‘ஆர்டர்’ கொடுத்துவிட்டு, ‘சைஸ்’ பொருந்தாமல் அவதிப்பட்டவர்களின் கஷ்டத்தை போக்குகிறது ‘ஜூஜூசூட் (ZOZOSuit) ’ அப்ளிகேசன். இந்த அப்ளிகேசன் வழியே நம்மை புகைப்படம் பிடித்தால், கழுத்து, கை, மார்பு, வயிறு, இடுப்பு, தொடை, முழங்கால், கணுக்கால் என அங்குலம் அங்குலமாக துல்லியமாக அளவிட்டுவிடுவதுடன், நாம் தேர்வு செய்யும் ஆடை நமது உடலமைப்புக்கு எந்த அளவு கச்சிதமாக பொருந்துகிறது என்பதை கண்முன் காட்டிவிடுகிறது. ஜப்பானின் இணைய வர்த்தக நிறுவனமான ‘ஸ்டார்ட் டூடே’, நியூஸிலாந்தின் வடிவமைப்பு நிறுவனமான ‘ஸ்ட்ரெச் சென்ஸ்’ உடன் இணைந்து இந்த அப்ளிகேசனை உருவாக்கி உள்ளது. இது மனிதர்களின் உடலமைப்பை ஸ்மால், மீடியம், லார்ஜ், எக்ஸ்எல், டபுள் எக்ஸ்எல் என்று மட்டும் வகைப்படுத்தாமல், துல்லியமாக கணித்து 15 ஆயிரம் விதமான உடலமைப்பாக வகையிட்டுள்ளதால், இதன் கணிப்பு கச்சிதமாக பொருந்துகிறது. தற்போது விளம்பரப்படுத்தும் நோக்கில் இந்த அப்ளிகேசனை இலவசமாக பதிவிறக்கி பயன்படுத்த அனுமதித்துள்ளனர். 

மேலும் செய்திகள்