ஐ.ஐ.டி. மாணவர் மாநாடு!

பள்ளி மாணவர்களுக்கான ‘ஸ்பார்க் ஜூனியர் கான்பரன்ஸ்’ என்ற மாணவர் மாநாடு நடந்தது.;

Update:2017-12-12 13:19 IST
சென்னை, ஐ.ஐ.டி. மெட்ராஸ் கல்வி மையம், இளம் பள்ளி மாணவர்களுக்கான ‘ஸ்பார்க் ஜூனியர் கான்பரன்ஸ்’ என்ற மாணவர் மாநாட்டை நடத்தியது. இந்தியா முழுவதும் இருந்து மாணவர்கள் தங்கள் படைப்புகளுடன் கலந்து கொண்டனர். அதில் மூன்று மாணவர் குழுவின் ஆய்வுத் திட்டம் பரிசுக்குரியதாக தேர்வு செய்யப்பட்டது.

பெங்களூருவைச் சேர்ந்த மாணவர்கள் விதுஷி பார்டரி மற்றும் ஆதித்யா அனிருத் ஆகியோர் உருவாக்கியிருந்த ‘ஹெல்த்கேர் டூ த மாஸஸ்’ என்ற தலைப்பிலான ஆய்வுக்கட்டுரை முதல் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டது. இவர்கள் ‘எம்.ஹெல்த்’ என்ற பெயரில் மருத்துவ செயல்பாடுகளை செல்போன் அப்ளிகேசன் வழியே செயல்படுத்தும் திட்டத்தை சமர்ப்பித்தனர். இதில் நாடு முழுவதும் மக்கள் தேடும் மருத்துவ தேடல்கள், மருந்துகள் கிடைக்க வழிவகை சொல்லப்பட்டிருந்தது. மருத்துவர்கள் தொலைதூரத்தில் இருந்து சம்பந்தப்பட்டவருடன் மருத்துவ ஆலோசனை வழங்கவும் இதில் குறிப்பிடப்பட்டிருந்தது.

சென்னை மாணவர்களான மானவ் மற்றும் நிகில் ஆகியோர், ‘ஹெல்த் போஸ்ட்’ என்ற பெயரில் தங்கள் ஆரோக்கிய ஆய்வுத்திட்டத்தை சமர்ப்பித்திருந்தனர். இந்தியாவின் மிகப்பெரிய நிறுவனமான அஞ்சல் துறையுடன் இணைந்து மருந்து வினியோகம், மருத்துவ விழிப்புணர்வு ஏற்படுத்தும் திட்டத்தை அவர்கள் முன்மொழிந்திருந்தனர். இந்த ஆய்வுத்திட்டம் இரண்டாம் பரிசுக்குத் தேர்வு செய்யப்பட்டது.

கோவையைச் சேர்ந்த டிர்த் மற்றும் பிரகதீஸ்வரன் ஆகியோர் கற்பித்தலில் புதுமையைப் புகுத்தும் செயல்திட்டத்தை சமர்ப்பித்திருந்தனர். மாணவர்களை செயல்வழி கற்றலுக்கு நகர்த் தும் வகையில் இவர்களது செயல்திட்டம் உருவாக்கப்பட்டிருந்தது. மாணவர்களுக்கு ஒவ்வொரு வாரமும் வாழ்வியல் மற்றும் பல்வேறு துறையைச் சார்ந்த பயிற்சி வழங்கப்பட வேண்டும் என்று வலியுறுத்துகிறது அவர்களின் திட்டம். இந்த பயிற்சியே அவர்களின் கற்றலாகவும், தேர்வு முறையாகவும் இருந்தால் மாணவர் திறன் மேம்படும் என்றும் அவர்கள் கூறியிருந்தனர். இந்த மாணவர்களின் படைப்பு 3-வது பரிசைப் பெற்றது. 

மேலும் செய்திகள்