கோவை அருகே சுடுகாட்டில் அனாதையாக விடப்பட்ட மூதாட்டி
கோவை அருகே சுடுகாட்டில் மூதாட்டி அனாதையாக விடப்பட்டார். அவரை, மகன், மகள் கவனிக்காததால் தவித்து வருகிறார்.
பேரூர்,
கோவை வீரகேரளம் கலிக்கநாயக்கன்பாளையம் அருகே குட்டைமேடு பகுதியில் ஒரு சுடுகாடு உள்ளது. இங்குள்ள ஓய்வு எடுக்கும் இடத்தில் 65 வயது மதிக்கத்தக்க மூதாட்டி ஒருவர் கடந்த ஒரு வாரமாக அமர்ந்து உள்ளார். அவர் இரவு நேரத்திலும் அங்கேயே படுத்து உறங்கி வருகிறார்.
இந்த நிலையில் நேற்று அந்த மூதாட்டி மிகவும் சோர்வுடன் சுடுகாட்டில் படுத்து இருந்தார். இதை அறிந்த அந்தப்பகுதியை சேர்ந்த சிலர், அந்த மூதாட்டியிடம் சென்று விசாரித்தனர். அப்போது அவர் கடந்த 2 நாட்களாக உணவு சாப்பிடவில்லை என்றும், பசி காரணமாக சோர்வாக இருப்பதாகவும் தெரிவித்தார். உடனே அவர்கள் அந்த மூதாட்டிக்கு சாப்பிட உணவு வாங்கி கொடுத்தனர். சாப்பிட்டதும் சோர்வு நீங்கிய அந்த மூதாட்டியிடம், அவர்கள் விசாரித்தனர்.
அப்போது அந்த மூதாட்டி கூறியதாவது:-
கலிக்கநாயக்கன்பாளையத்தை சேர்ந்த எனது பெயர் கருப்பாயி. எனக்கு 2 மகன்களும், ஒரு மகளும் உள்ளனர். எனது கணவரும், இளைய மகனும் இறந்துவிட்டனர். என்னை எனது மகள் கவனித்து வந்தார். அவளுடைய கணவரும் இறந்துவிட்டதால், அவளால் என்னை கவனிக்க முடியவில்லை. இதனால் எனது மகன் வீட்டிற்கு சென்றேன். அவன் என்னை கவனிக்க முடியாது என்றுக்கூறி கடந்த ஒரு வாரத்துக்கு முன்பு ஆட்டோவில் என்னை ஏற்றி இங்கு விட்டுச்சென்று விட்டான்.
தினமும் எனக்கு உணவு வாங்கி கொடுப்பான். ஆனால் கடந்த 2 நாட்களாக அவன் இங்கு வர வில்லை. இதனால் நான் சாப்பாடு இல்லாமல் தவித்து வருகிறேன். எனக்கு பிள்ளைகள் இருந்தும் என்னை யாருமே கவனிக்க முன்வரவில்லை. எனவே என்னை கருணை கொலை செய்து விடுங்கள் என்று கண்ணீர் மல்க தெரிவித்தார்.
இதுகுறித்து போலீஸ் உயர் அதிகாரிகளிடம் கேட்டபோது, ‘ஆதரவு இல்லாமல் சுடுகாட்டில் இருக்கும் மூதாட்டி குறித்து தகவல் அறிந்ததும் அவரை மீட்பதற்காக நேற்று இரவு 8 மணிக்கு அங்கு சென்றோம். ஆனால் சுடுகாட்டில் அவர் இல்லை. ஆனாலும், அவரை மீட்டு முதியோர் காப்பகத்தில் விட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது’ என்றனர்.