ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் நூதன போராட்டம்
ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் மருத்துவ மாணவர்கள் நேற்று நூதன போராட்டம் நடத்தினர். அப்போது கோரிக்கைகளை அரசு கண்டுகொள்ளாமல் முதுகில் குத்துவது போன்று நடித்துக்காட்டினர்.;
நெல்லை,
நெல்லை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரியில் பட்டமேற்படிப்பு மருத்துவ மாணவ- மாணவிகள் கடந்த 28-ந் தேதி முதல் போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். அவர்கள் ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான போராட்டம் நடத்தி வருகின்றனர். நேற்று 14-வது நாளாக மருத்துவ மாணவர்கள் போராட்டம் நடத்தினர். போராட்டத்துக்கு மாணவர்கள் கூட்டமைப்பு தலைவர் எட்வின் கிங்ஸ் ராஜ் தலைமை தாங்கினார். செயலாளர் பசுபதி முன்னிலை வகித்தார்.
தமிழக அரசு மருத்துவமனைகளில் 550 டாக்டர்கள் நியமனத்தில் அரசு ஏற்கனவே அறிவித்த நடைமுறையை பின்பற்றவில்லை. எனவே இந்த பணி நியமனத்தை ரத்து செய்து, அந்த பணியிடத்தில் அரசு டாக்டர்களை நியமிக்க வேண்டும். பதிவுமூப்பு அடிப்படையில் டாக்டர்களை பணியமர்த்த வேண்டும். புதிதாக நியமிக்கப்படும் டாக்டர்களுக்கு கிராமப்புற சேவையை கட்டாயமாக்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி இந்த போராட்டம் நடந்து வருகிறது.
நடித்துக் காட்டினர்
போராட்டத்தில் கலந்து கொண்ட பெரும்பாலான மாணவர்கள் கருப்பு சட்டை அணிந்து இருந்தனர். அப்போது, கோரிக்கைகளை கண்டு கொள்ளாமல் தமிழக அரசு, மருத்துவ மாணவர்கள் முதுகில் குத்துவதாக அவர்கள் நடித்துக் காட்டினர்.
இந்த போராட்டத்தை, ஐகிரவுண்டு ஆஸ்பத்திரிக்கு வந்த நோயாளிகளும், அவருடைய உறவினர்களும் பார்த்து ரசித்தனர்.