உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் பள்ளமாகி போன சாலையால் விபத்து அபாயம்
உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளம் ஏற்பட்டுள்ளதால். விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இதனை சீரமைக்க வேண்டுமென்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
உசிலம்பட்டி,
உசிலம்பட்டியிலிருந்து வத்தலக்குண்டிற்கு செல்லும் சாலையில் ஆங்காங்கே பெரிய அளவிலான பள்ளங்கள் ஏற்பட்டுள்ளன. தினமும் இந்த சாலை வழியாக நுாற்றுக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன. இந்த சாலையில் வாகனங்களை ஓட்டி செல்பவர்களுக்கு பள்ளம் இருப்பது தெரியாததால், ஏராளமான வாகனங்கள் விபத்தில் சிக்கிக்கொள்கின்றன. இந்தநிலையில் தற்போது இந்த சாலையில் உள்ள எஸ்.ஒ.ஆர். நகர் அருகில் பெரிய பள்ளம் ஏற்பட்டுள்ளது.
இந்த பள்ளத்தை சரி செய்ய கோரி நெடுஞ்சாலைத்துறைக்கு இந்த பகுதி பொதுமக்கள் பலமுறை புகார் செய்துள்ளனர்.
ஆனால் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. பள்ளம் குறித்த எவ்வித அறிவிப்பும் வைக்கப்படாததால், இருசக்கர வாகனங்களில் செல்பவர்கள் சாலையில் உள்ள பள்ளம் தெரியாமல், அதற்குள் வாகனத்துடன் விழுந்து காயமடைந்துள்ளனர். பள்ளமாகி போன சாலையில் பெரும் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
அதேபோல இதே சாலையில் சுமார் 100 மீட்டர் தூரத்தில் உள்ள அன்னம்பாரிபட்டியிலும் சாலை பெயர்ந்து விபத்தை ஏற்படுத்தும் அளவிற்கு பள்ளம் ஏற்பட்டுள்ளது. ஒரே சாலையில் ஆங்காங்கே விபத்தை ஏற்படுத்தும் வகையில் பள்ளங்களுடன் சாலை பழுதாகி உள்ளதை சம்பந்தப்பட்டவர்கள் யாரும் கண்டு கொள்ளவில்லை.
நெடுஞ்சாலையில் ஏற்பட்டுள்ள இந்த குறைபாடால் அந்த பகுதி மக்கள் பெரும் அவதியடைந்து வருகின்றனர். எனவே விபத்துக்களை ஏற்படுத்தி வரும் உசிலம்பட்டி-வத்தலக்குண்டு சாலையை சீரமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டுமென்று பொதுமக்களும் வாகன ஓட்டிகளும் கோரிக்கை விடுத்துள்ளனர்.