மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி
மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி ரங்கசாமி தொடங்கி வைத்தார்.;
புதுச்சேரி,
புதுவை தேக்வாண்டோ விளையாட்டு சங்கத்தின் சார்பில் மாநில அளவிலான தேக்வாண்டோ போட்டி உப்பளம் ராஜீவ்காந்தி உள் விளையாட்டு அரங்கில் நடைபெற்றது. இதன் தொடக்க விழாவில் முன்னாள் முதல்–அமைச்சரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான ரங்கசாமி கலந்துகொண்டு போட்டிகளை தொடங்கி வைத்தார்.
முன்னாள் அமைச்சர் ராஜவேலு, புதுச்சேரி ஒலிம்பிக் சங்க துணைத்தலைவர் செல்வம், இந்திய விளையாட்டு ஆணைய புதுவை பகுதி இணை இயக்குனர் முத்துகேசவலு, தேக்வாண்டோ விளையாட்டு சங்க நிறுவன செயலாளர் ஸ்டாலின் உள்பட பலர் கலந்துகொண்டனர். பல்வேறு பிரிவுகளாக நடந்த போட்டிகளில் வெற்றி பெற்ற வீரர், வீராங்கனைகளுக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.