எரிவாயு சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம்

எரிவாயு சிக்கன விழிப்புணர்வு ஊர்வலம் அமைச்சர் கந்தசாமி தொடங்கிவைத்தார்.

Update: 2017-12-10 22:42 GMT

புதுச்சேரி,

இந்தியன் ஆயில் கார்ப்பரேசன் சார்பில் எண்ணெய் மற்றும் எரிவாயு சிக்கன விழிப்புணர்வு சைக்கிள் ஊர்வலம் புதுவையில் நேற்று நடந்தது. புதுவை கடற்கரை காந்தி திடலில் இருந்து தொடங்கிய இந்த ஊர்வலத்தை அமைச்சர் கந்தசாமி கொடியசைத்து தொடங்கிவைத்தார்.

நிகழ்ச்சியில் இந்தியன் ஆயில் கார்ப்பரேசனின் மண்டல சேவை செயல் இயக்குனர் செந்தில்குமார், ஒருங்கிணைப்பாளர் சித்தார்த்தன், முதன்மை பொதுமேலாளர் நாகராஜன் மற்றும் பலர் கலந்துகொண்டனர்.

இந்த விழிப்புணர்வு ஊர்வலம் கடற்கரையில் தொடங்கி, பட்டேல் சாலை, அண்ணாசாலை, புஸ்சி வீதி வழியாக சென்று மீண்டும் கடற்கரையில் நிறைவடைந்தது. எரிபொருள் சிக்கனத்தின் முக்கியத்துவம் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்துவதும், ஆரோக்கியமான போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதுமே இந்த ஊர்வலத்தின் முக்கிய நோக்கமாகும்.

மேலும் செய்திகள்