ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் - மதுசூதனனை தகுதி நீக்கம் செய்யவேண்டும் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் பேட்டி
ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் தினகரன் மற்றும் மதுசூதனனை தகுதி நீக்கம் செய்யவேண்டும் என்று ஈரோட்டில் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் கூறினார்.
ஈரோடு,
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் மிலாது நபி விழா மற்றும் சமூக நல்லிணக்க மாவட்ட மாநாடு நேற்று ஈரோட்டில் நடைபெற்றது மாநாட்டுக்கு மாநில பிரதிநிதி முகம்மது தாஜ் மொகிதீன் தலைமை தாங்கினார். தேசிய தலைவர் கே.எம்.காதர் மொகிதீன், காங்கிரஸ் கட்சி முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ். இளங்கோவன் ஆகியோர் கலந்து கொண்டு பேசினார்கள்.
மாநாட்டில் வக்பு வாரிய உறுப்பினர் முகம்மது அபுபக்கர், துணைத்தலைவர் அப்துல் ரகுமான், பொருளாளர் ஷாஜஹான் உள்பட பலர் கலந்து கொண்டார்கள். முன்னாள் முன்னதாக தெற்கு மாவட்ட தலைவர் நூர் முகம்மது வரவேற்று பேசினார். பொருளாளர் அகமது சிராஜ் நன்றி கூறினார்.
தகுதி நீக்கம்
முன்னதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ஈ.வி.கே.எஸ்.இளங்கோவன் நேற்று ஈரோட்டில் நிருபர்களுக்கு பேட்டி அளித் தார். அப்போது அவர் கூறியதாவது:-
கடந்த முறை ஆர்.கே.நகர் இடைத்தேர்தலின் போது டி.டி.வி.தினகரன் பணப்பட்டுவாடா செய்தார் என்ற குற்றச்சாட்டு ஏற்கனவே உள்ளது. அதற்கான ஆதாரங்களும் இருக்கின்றன. அப்படி இருக்கும்போது மீண்டும் அதே தொகுதியில் நிற்பது ஜனநாயகத்தின் மீது மக்களுக்கு இருக்கின்ற நம்பிக்கை போய்விடும்.
எனவே இந்த தேர்தலில் தினகரனையும், அ.திமு.க. வேட்பாளர் மதுசூதனையும் தகுதி நீக்கம் செய்யவேண்டும். கன்னியாகுமரி மாவட்டத்தில் புயலால் மீனவர்கள் மிகவும் பாதிக்கப்பட்டு உள்ளனர். பலர் காணாமல் போய் இருக்கிறார்கள். ஆனால் இதுவரை தமிழக முதல் -அமைச்சர் அங்கு சென்று அவர்களுடைய குறைகளை கேட்கவில்லை.
நேரில் செல்லவில்லை
சென்னையில் புயல் வந்தபோது முதல் -அமைச்சர் காரிலே சென்று காரிலேயே திரும்பி விட்டார். ஒரு இடத்தில் கூட அவர் மக்களுடைய குறைகளை கேட்கவில்லை. இது பொதுமக்களிடையே அக்கறை இல்லாத நிலையை காட்டுகிறது. இந்த விஷயத்தில் கேரள முதல் -அமைச்சர் விரைந்து செயல்பட்டு கொண்டு இருக்கிறார்.
இன்று (நேற்று) டெல்லி சென்று பிரதமரை சந்தித்து பேரிடர் மாநிலமாக அறிவிக்க வேண்டும். எங்களுக்கு உரிய நஷ்டஈடு வழங்கவேண்டும் என்று கூறி உள்ளார். ஆனால் தமிழக முதல் -அமைச்சர் இதைப்பற்றி கண்டுகொல்லாமல் ஊர் ஊராக சென்று எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழா நடத்திக்கொண்டு இருக்கிறார். பாவப்பட்ட மக்களுக்கு இதுவரை ஒரு உதவி கூட செய்யவில்லை. நேரில் சென்று ஆறுதலும் கூறவில்லை.
இவ்வாறு அவர் கூறினார்.
முஸ்லிம்களுக்கு பாதுகாப்பு இல்லை
இந்திய யூனியன் முஸ்லிம் லீக் தேசிய தலைவர் காதர் மொகிதீன் கூறும்போது, ‘கடந்த காங்கிரஸ் ஆட்சியின்போது முஸ்லிம்களுக்கு மதிப்பு, மரியாதை, பாதுகாப்பு இருந்தது. இன்றைய ஆட்சியில் அது இல்லை. அதற்கு பத்திரிகை மற்றும் ஊடகங்களில் வருகின்ற செய்திகள் ஆதாரமாக உள்ளது. தொல்.திருமாவளவன் இந்து கோவிலை இடிக்கவேண்டும் என்று கூறவில்லை. அவரே அதற்கு தகுந்த விளக்கத்தையும் கொடுத்துள்ளார்.
இந்தியாவில் புத்த விகாரிகள் நிறைய இருந்தது. அவற்றை இடித்துத்தான் இந்து கோவில்கள் கட்டப்பட்டன. அப்படி என்றால் புத்த விகாரிகளை இடித்து இந்து கோவில்கள் கட்டும்போது, இந்து கோவிலை அகற்றிவிட்டு வேறு கோவில்கள் கட்டக்கூடாதா? என்று தான் கூறி உள்ளாரோ தவிர இந்து கோவிலை இடிக்கவேண்டும் என்று அவர் கூறவில்லை’ என்றார்.