திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மை நகர கணக்கெடுப்பு விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம்
திருச்சி மாநகராட்சி சார்பில் தூய்மை நகர கணக்கெடுப்பு பற்றிய விழிப்புணர்வு மாரத்தான் ஓட்டம் நடந்தது. இதில் கல்லூரி மாணவ, மாணவிகள் ஏராளமானவர்கள் பங்கேற்றனர்.
திருச்சி,
இந்திய அளவில் தூய்மை நகரங்களின் பட்டியலில் கடந்த ஆண்டு ஆறாவது இடத்தை பிடித்து உள்ள திருச்சி மாநகராட்சியை முதல் இடத்திற்கு கொண்டு வருவதற்கு பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. வீடுகள் தோறும் குப்பைகளை வாகனங்கள் மூலம் தினமும் சேகரிப்பது வாரத்தின் ஒவ்வொரு புதன்கிழமையும் மக்காத குப்பைகளை தனியாக வாங்குவது என பல திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டு உள்ளது. மேலும் அகில இந்திய அளவில் முதலிடத்தை பிடிப்பதற்காக பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகளும் நடத்தப்பட்டு வருகிறது.
இதன் ஒரு பகுதியாக நேற்று திருச்சி மாநகராட்சி சார்பில் மாரத்தான் ஓட்டம் நடந்தது. வருகிற ஜனவரி மாதம் 4-ந்தேதி முதல் தூய்மை நகர கணக்கெடுப்பு பணி தொடங்க இருப்பது பற்றி பொதுமக்களிடம் விழிப்புணர்வு ஏற்படுத்துவதற்காக நடந்த இந்த மாரத்தான் ஓட்டத்தை தென்னூர் அண்ணாநகர் உழவர் சந்தை அருகில் நேற்று காலை திருச்சி மாவட்ட கலெக்டர் கே.ராஜாமணி, மாநகராட்சி ஆணையர் ரவிச்சந்திரன், திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் (குற்றம் மற்றும் போக்குவரத்து) மயில்வாகனன் ஆகியோர் கொடியசைத்து தொடங்கி வைத்தனர்.
முதலில் மாணவர்களுக்கான மாரத்தான் ஓட்டமும், இரண்டாவதாக மாணவிகளுக்கான மாரத்தான் ஓட்டமும் தனித்தனியாக தொடங்கி வைக்கப்பட்டது. இதில் ஏராளமான கல்லூரி மாணவ-மாணவிகள் பங்கேற்று ஓடினர். கோர்ட்டு எம்.ஜி.ஆர் சிலை, தலைமை தபால் நிலையம், டி.வி.எஸ். டோல்கேட் வழியாக மாரத்தான் ஓட்டம் அண்ணா விளையாட்டு அரங்கில் நிறைவு பெற்றது. இதில் மாணவர்கள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களும், மாணவிகள் பிரிவில் முதல் 3 இடங்களை பிடித்தவர்களும் பரிசுக்காக தேர்ந்தெடுக்கப்பட்டு உள்ளனர்.
ஒவ்வொரு பிரிவிலும் தனித்தனியாக முதல் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.20 ஆயிரம், இரண்டாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.15 ஆயிரம், மூன்றாம் இடம் பிடித்தவர்களுக்கு ரூ.10 ஆயிரம் பரிசு வழங்கப்படும். இது தவிர மாணவர்கள் பிரிவில் 7 பேர், மாணவிகளில் 7 பேர் என மொத்தம் 14 பேருக்கு தலா ரூ.1000 ஆறுதல் பரிசும் வழங்கப்பட உள்ளது. வருகிற 13-ந்தேதி (புதன்கிழமை) மாநகராட்சி மைய அலுவலகத்தில் நடைபெற உள்ள விழாவில் வெற்றி பெற்றவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட உள்ளது.
இதைத்தொடர்ந்து திருச்சி மாநகராட்சி 33-வது வார்டு சேதுராமன் பிள்ளை காலனியில் உள்ளவர்கள் குப்பைகளை தரம் பிரித்து வழங்குவதற்காக இரு வண்ண குப்பை தொட்டிகள் வழங்கும் நிகழ்ச்சி ஆணையர் ரவிச்சந்திரன் தலைமையில் நடைபெற்றது. நகர பொறியாளர் அமுதவள்ளி, நகர் நல அதிகாரி சித்ரா, குப்பை தொட்டி உபயதாரர் பாலாஜி ஆகியோர் பேசினர். இதில் தூய்மை இந்தியா இயக்கத்திற்கான தூதரான திரைப்பட இசை அசைப்பாளர் ஜேம்ஸ் வசந்தன் கலந்து கொண்டு குப்பை தொட்டிகளை குடியிருப்பு வாசிகளுக்கு வழங்கினார்.