நிறுத்தப்பட்டிருந்த லாரியில் இருந்து, ரூ.3 லட்சம் பொருட்களை திருடிய 5 பேர் கைது
மாதவரத்தில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த லாரியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்புள்ள பொருட்களை திருடியதாக 5 பேரை போலீசார் கைது செய்தனர்.;
செங்குன்றம்,
மத்தியபிரதேச மாநிலத்தில் இருந்து சென்னையில் உள்ள ஒரு ஏஜென்சிக்கு பேஸ்ட், தேன் உள்ளிட்ட ரூ.10 லட்சம் மதிப்புள்ள பொருட்களை ஏற்றிக் கொண்டு கடந்த மாதம் 20-ந்தேதி லாரி ஒன்று மாதவரம் வந்தது. அந்த லாரியை டிரைவர் ரவுண்டானா அருகே ஒரு வாகன நிறுத்துமிடத்தில் நிறுத்தி இருந்தார். மறுநாள் பொருட்களை சென்னை ஏஜென்சியில் இறக்க அவர் திட்டமிட்டு இருந்தார்.
மறுநாள் காலையில் அவர் வந்து பார்த்த போது லாரியில் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான 535 பெட்டிகள் மாயமாகி இருந்தது.
இதுகுறித்து லாரி அதிபரான விருகம்பாக்கத்தை சேர்ந்த ஆர்தர் ஜோசப் (வயது60) புழல் போலீசில் புகார் செய்தார். அதன்பேரில் மாதவரம் குற்றப்பிரிவு போலீசார் வழக்குபதிவு செய்து திருட்டு ஆசாமிகளை தேடி வந்தனர்.
இந்த திருட்டு தொடர்பாக மாதவரம் துணைகமிஷனர் உத்தரவின் பேரில் மாதவரம் உதவி கமிஷனர் ஜெயசுப்பிரமணியம் மேற்பார்வையில் குற்றப்பிரிவு சப்-இன்ஸ்பெக்டர் பாக்கியராஜ் தலைமையில் தனிப்படை அமைக்கப்பட்டது.
தனிப்படை போலீசார் அந்த வாகன நிறுத்தும் இடத்தில் இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து விசாரணை மேற்கொண்டனர். அப்போது அந்த லாரியில் இருந்து வேறு ஒரு லாரிக்கு பொருட்கள் ஏற்றியதையும் அந்த லாரியின் பதிவு எண்ணைக்கொண்டு விசாரணை தொடங்கினர். அப்போது லாரியில் திருடிய பொருட்களை கொளத்தூரில் உள்ள ஒரு வியாபாரிக்கு விற்பனை செய்தது தெரியவந்தது.
இந்த திருட்டு தொடர்பாக புழல் திருவள்ளுவர் தெருவைச் சேர்ந்த சீனிவாசன்(29), அருண்பாண்டி(23) செங்குன்றத்தை சேர்ந்த பிரபு(33), மற்றும் புழல் பகுதியை சேர்ந்த அசோக்(28), அருண்(20) ஆகிய 5 பேரை போலீசார் கைது செய்தனர்.
கைதான 5 பேரையும் திருவொற்றியூர் கோர்ட்டில் போலீசார் ஆஜார்படுத்தி புழல் ஜெயிலில் அடைத்தனர். இவர்களிடம் இருந்து ரூ.3 லட்சம் மதிப்பிலான பொருட்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.