மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமைகள் தின நிகழ்ச்சி

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்றத்தில் மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது.

Update: 2017-12-10 21:00 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட நீதிமன்ற வளாகத்தில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு சார்பில் மனித உரிமைகள் தின நிகழ்ச்சி நடைபெற்றது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி மகிழேந்தி தலைமை தாங்கினார். தலைமை குற்றவியல் நீதிபதி நாராஜா முன்னிலை வகித்தார். மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழுவின் செயலாளர் ராஜ்மோகன் வரவேற்றார்.

நிகழ்ச்சியில் முதன்மை சார்பு நீதிபதி முனுசாமி, கூடுதல் சார்பு நீதிபதி ஸ்ரீராம், மோட்டார் வாகன விபத்து வழக்குகளின் சார்பு நீதிபதி பக்தவச்சலு, மாஜிஸ்திரேட்டுகள், வக்கீல்கள் மற்றும் பலர் கலந்து கொண்டனர்.

ஏற்பாடுகளை மாவட்ட சட்டப்பணிகள் குழுவின் நிர்வாக அலுவலர் சையத் ரஷீத் செய்திருந்தார்.


மேலும் செய்திகள்