தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம்

திருவண்ணாமலையில் தொடக்க, நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான ஆய்வு கூட்டம் கலெக்டர் தலைமையில் நடைபெற்றது.

Update: 2017-12-10 21:45 GMT

திருவண்ணாமலை,

திருவண்ணாமலை மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலக கூட்டரங்கில் திருவண்ணாமலை மாவட்ட ஒன்றிய பள்ளிகளில் பணிபுரியும் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான கற்றல் அடைவுத்திறன் மேம்படுத்துவது குறித்து ஆய்வு கூட்டம் நடைபெற்றது. மாவட்ட கலெக்டர் கே.எஸ்.கந்தசாமி தலைமை தாங்கி பேசுகையில், ‘நானும் ஒரு அரசுப்பள்ளி மாணவர் தான். போட்டி தேர்வுகளுக்கு நான் எவ்வளவு படித்தும், வினாக்கள் அனைத்தும் நடுநிலைப்பள்ளி பாடங்களிலேயே வந்தது. பதவிகள் மாற, மாற மதிப்பு கூடும். ஆனால் ஆசிரியர்கள் என்றும் சமுதாயத்தில் மதிக்கப்படக் கூடியவர்கள். அவர்கள் கற்பிக்கும் தன்மைக்கேற்ப சமுதாயத்தில் மதிக்கப்படுவார்கள். நான் இந்த நிலை உயர என் ஆசிரியர்களே காரணம்’ என்றார்.

கூட்டத்தில் மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் ஜெயக்குமார், திட்ட உதவி ஒருங்கிணைப்பாளர் சுப்பிரமணியன், உதவி மற்றும் கூடுதல் உதவி தொடக்கக்கல்வி அலுவலர்கள், மாவட்ட ஒருங்கிணைப்பாளர்கள், மேற்பார்வையாளர்கள், ஆசிரியர் பயிற்றுனர்கள், சிறப்பு கருத்தாளர்கள் உள்பட பலர் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்