விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
குடியாத்தத்தில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
குடியாத்தம்,
விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவன் தலைக்கு 1 கோடி ரூபாய் அறிவித்ததை கண்டித்தும், திருமாவளவனுக்கு தமிழக அரசு பாதுகாப்பு அளிக்க வலியுறுத்தியும், அவரை அவதூறாக பேசிவரும் இந்து முன்னணி நிர்வாகிகள் மற்றும் பா.ஜ.க. தலைவர்களை கண்டித்தும் குடியாத்தம் புதிய பஸ் நிலையம் அருகே ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.
ஆர்ப்பாட்டத்துக்கு நகர தலைவர் குமரேசன் தலைமை தாங்கினார். தொகுதி செயலாளர் வேதாச்சலம், மாவட்ட செய்தி தொடர்பாளர் வாசுதேவன், ஒன்றிய செயலாளர்கள் விடுதலைசெழியன், தமிழரசன், மாவட்ட தொண்டரணி அமைப்பாளர் ராஜேஷ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். பாராளுமன்ற தொகுதி செயலாளர் செல்லபாண்டியன் கண்டன உரை ஆற்றினார்.
ஆர்ப்பாட்டத்தில் மாவட்ட துணை செயலாளர் விவேக், மாவட்ட பொருளாளர் செல்லையன், வெங்கடேசன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
அனுமதியின்றி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சியினரை போலீசார் கைது செய்தனர்.