வேற்றுக்கிரக ஆராய்ச்சி

வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து போவதாக நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது.

Update: 2017-12-10 09:15 GMT
வேற்று கிரக வாசிகள் எனப்படும் ஏலியன்ஸ் பூமியில் யாருக்கும் புலப்படாமல் அவ்வப்போது வந்து போவதாக நம்புவோரின் எண்ணிக்கை தற்போது பரவலாக அதிகரித்து வருகிறது. கலிபோர்னியா நகரில் மோனோ என்ற ஏரி உள்ளது. இந்த ஏரியில் அதிக விஷத்தன்மை கொண்ட ஆர்சனிக் என்ற நச்சுப்பொருள் கலந்துள்ளது. இதில் உயிர்கள் வாழ்வது என்பது அரிதான ஒன்று என கருதப்பட்டு வந்தது.

இந்தநிலையில் ஆராய்ச்சியாளர்கள், ஏரியின் கீழ்பகுதியில் நுண்ணிய பாக்டீரியா வகையினை கண்டறிந்துள்ளனர். இது ஆர்சனிக் என்ற நச்சுப் பொருளை எடுத்து கொண்டு வாழ்வது தெரியவந்துள்ளது. இதனை அடிப்படையாக கொண்டு, வேற்று கிரகத்தில் உயிரினங்கள் வாழ்வதற்குரிய சாத்தியக்கூறுகள் உள்ளன என அவர்கள் கூறுகின்றனர். மேலும் விஞ்ஞானிகள், பல நூறு பில்லியன் டிரில்லியன் ஆண்டுகளை கடந்து விண்வெளியில் அமைந்திருக்கும் பூமி போன்ற வேற்றுக் கிரகங்களில் உயிரினங்கள் வாழும் வாய்ப்புள்ளது என கணித்துள்ளனர்.

கடந்த 10 வருடங்களில், சூரிய குடும்பத்தை தவிர்த்து 500 கிரகங்கள் வரை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. கடந்த சில ஆண்டுகளில் வானியலாளர்கள் பூமி போன்று 3 மடங்கு பெரிதான கிரகம் ஒன்றை கண்டறிந்துள்ளனர். இந்த கிரகத்தில் நம் பூமியில் இருப்பது போல் வளிமண்டலம், புவி ஈர்ப்பு விசை, மேற்பரப்பில் நீர் ஆகியவை இருப்பதற்கான ஆதாரங்கள் தெரியவந்துள்ளன. இதற்கு ‘கிளஸ் ஜி’ என பெயரிட்டுள்ளனர். இதிலிருந்து வெளிப்படும் ஒளியானது பூமியை வந்தடைய 20 வருடங்கள் ஆகும் எனவும் கணக்கிட்டுள்ளனர்.

இதையடுத்து வேற்றுக் கிரகத்தில் உயிரினங்கள் பற்றிய ஆராய்ச்சி மேலும் வலுவடைந்துள்ளது. அது தொடர்பான விவாதங்களும் சூடுபிடித்துள்ளன. இதுவரை நமக்குத் தெரிந்த வைரஸ் முதல் மனிதன் வரை அனைத்து உயிர்களும் கார்பன், ஹைட்ரஜன், நைட்ரஜன், ஆக்ஸிஜன், பாஸ்பரஸ், சல்பர் என 6 ரசாயனங்களால் உருவானவை. இந்த பாக்டீரியாவின டி.என்.ஏ.யில் பாஸ்பரஸ் இல்லை என்பது தான் அந்த பகீர் தகவல். அதன் டி.என்.ஏ.வில் பாஸ்பரசுக்குப் பதிலாக ஆர்சனிக் என்ற ரசாயனம் தான் உள்ளது. ஆர்சனிக் பாக்டீரியா கண்டுபிடிக்கப்பட்டதன் மூலம் உயிரின் அடிப்படை விதியே தகர்க்கப்பட்டுள்ளது. இந்த ஆராய்ச்சி வேற்றுக்கிரகத்தில் மனிதர்கள் வாழக்கூடிய சாத்தியத்தை அதிகப்படுத்தியுள்ளதாக விஞ்ஞானிகள் நம்புகிறார்கள். 

மேலும் செய்திகள்