தினமும் 150 குழந்தைகளுக்கு தாய்ப் பால்
வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் பொது தாய்ப்பால் வங்கிகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன.
வெளிநாடுகளைத் தொடர்ந்து இந்தியாவிலும் பொது தாய்ப்பால் வங்கிகள் உருவாகத் தொடங்கியிருக்கின்றன. இந்தியாவின் முதல் தாய்ப்பால் வங்கியை தலைநகர் டெல்லியில் தொடங்கிய ‘அமாரா’ என்ற அமைப்பு, அடுத்ததாக பெங்களூருவில் தாய்ப்பால் வங்கி அமைக்கும் பணியை மேற்கொண்டிருக்கிறது. இந்த வங்கி, தாய்ப்பால் தேவைப்படும் குழந்தைகளுக்கு, குறிப்பாக குறைமாதக் குழந்தைகளுக்கு, பதப்படுத்தப்பட்ட, தூய்மையான தாய்ப்பாலை வழங்கும்.
அமாரா அமைப்பின் இணை நிறுவனர்களில் ஒருவரான டாக்டர் அங்கிட் ஸ்ரீவஸ்தவா, “குறைமாதக் குழந்தைகளின் தாய்மார்களுக்கும், தாய்ப்பால் தேவைப்படும் எல்லா குழந்தை களுக்கும் உதவும் நோக்கில் ஓராண்டுக்கு முன்பு, இந்தியாவின் முதல் தாய்ப்பால் வங்கியை டெல்லியில் நாங்கள் தொடங்கினோம். தற்போது எங்கள் அமைப்பின் மூலம் தலைநகரில் தினமும் 150 குழந்தைகளுக்கு தாய்ப்பால் வழங்கப்படுகிறது. ஏராளமான தாய்மார்கள் தாய்ப்பால் தானம் அளிக்கவும் முன்வருகிறார்கள்” என்கிறார்.
“தாய்ப்பால் வங்கி என்பது புதுமுறை. எனவே இது தொடர்பான தயக்கமும் சில தாய்மார்களுக்கு இருக்கிறது. ஆனால் தாய்ப்பாலின் தேவை குறித்து நாங்கள் விழிப் புணர்வை ஏற்படுத்துகிறோம், தாய்ப்பால் தானத்துக்கு தாய்மார்களையும் ஊக்குவிக்கிறோம்” என்றும் கூறுகிறார்.
இந்தத் தாய்ப்பால் வங்கிகள் மூலம் தாய்ப்பால் இலவசமாகவே வழங்கப்படுகிறது, எனவே தாய்மார்களிடம் இருந்தும் இலவசமாகவே தாய்ப்பால் பெறப்படுகிறது.
“எங்களுடைய முயற்சி, சேவை நோக்கிலானது. எனவே இளந்தாய்மார்கள் தாங்களாக முன்வந்து தாய்ப்பாலை வழங்க வேண்டும். அதன்மூலம் தாய்ப்பாலின்றி இறக்கும் எண்ணற்ற சிசுக்களைக் காப்பாற்ற முடியும். டெல்லியைத் தொடர்ந்து நாங்கள் பெங்களூருவை தேர்வு செய்ததற்குக் காரணம், இங்கு இதுகுறித்த விழிப்புணர்வை ஏற்படுத்துவது எளிது என்பதுதான். நாங்கள் இந்த வங்கியை முறைப்படி தொடங்கும்முன்பே, தாய்மார்கள் பலரும் தாங்கள் தாய்ப்பால் தானமளிக்கிறோம் என்று கூறிவிட்டார்கள்” என்று அங்கிட் உற்சாகமாகத் தெரிவிக்கிறார்.
தாய்ப்பால் பெறப்பட்டு, தேவைப்படும் குழந்தைகளுக்கு அப்படியே வழங்கப்படுவதில்லை. அதற்குமுன் சில செயல்முறைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதுகுறித்து, சிசுவியல் மருத்துவரும் அமாரா இணை நிறுவனருமான ரகுராம் மல்லையா கூறுகையில், “நாங்கள் இதை மருத்துவ வங்கி என்றே கூறுகிறோம். காரணம், தேவையில்லாதவற்றை நீக்கியபிறகே நாங்கள் அதை குழந்தைகளுக்கு வழங்குகிறோம். தாய்மார்களிடம் இருந்து பெறப்படும் பால், பதப்படுத்தப்பட்டு, குளிர்நிலையில் ஸ்டோர் செய்யப்படுகிறது. அதன்பிறகே குழந்தைகளுக்கு அளிக்கப்படுகிறது.
தாய்ப்பால் தூய்மையானது என்றாலும், அதில் தீங்கு ஏற்படுத்தக்கூடிய பாக்டீரியா போன்ற நுண்ணுயிரிகள், பிற விஷயங்கள் சேரக்கூடும். எனவே இந்தத் தாய்ப்பால், எந்திரம் வழியாக பல்வேறு சுழற்சிகளுக்கு உட்படுத்தப்படுகிறது. பின், அரைமணி நேரத்துக்கு 64 டிகிரி செல்சியஸ் வெப்பத்தில் பதப்படுத்தப்படுகிறது. அதன் மூலம், தீங்கு ஏற்படுத்தும் அனைத்தும் செயலிழக்கும். பின்பு பால் தூய்மையாகிவிட்டாலும், அப்படியே குழந்தைகளுக்குக் கொடுக்க முடியாது. எனவேதான் அது குளிர்பதன அமைப்பில் குளிரூட்டப் படுகிறது. நாங்கள் பெறும் தாய்ப்பாலை குழந்தைகளுக்குக் கொடுக்கும் முன்பு அது முற்றிலும் கிருமிநீக்கம் செய்யப்பட்டிருக்க வேண்டும் என் பதில் நாங்கள் மிகவும் கவனமாயிருக்கிறோம்” என்று நீண்ட விளக்கம் கொடுக்கிறார்.
இந்த செயல்முறைகள் அனைத்தும், ஐரோப்பிய நாடுகளில் உள்ள தாய்ப்பால் வங்கிகளில் பின்பற்றப்படுபவை. அவற்றை அப்படியே இங்கும் மாறாமல் கடைப்பிடிக்கின்றனர்.
டெல்லி, பெங்களூருவைத் தொடர்ந்து, நாடு முழுவதும் பொது தாய்ப்பால் வங்கிகள் உருவாகும் என்று நம்பலாம்.