உடற்பயிற்சி புது ஆய்வு

நிம்மதியான தூக்கத்திற்கு உடற்பயிற்சிதான் சிறந்த மருந்து என்பதை புதிய ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. உடற்பயிற்சி தூக்கத்திற்கு ஒத்துழைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் செய்கிறது என்கிறது, அந்த ஆய்வுகள்.

Update: 2017-12-10 05:29 GMT
நிம்மதியான தூக்கத்திற்கு உடற்பயிற்சிதான் சிறந்த மருந்து என்பதை புதிய ஆய்வுகள் நிரூபித்திருக்கின்றன. உடற்பயிற்சி தூக்கத்திற்கு ஒத்துழைக்கவும், தூக்கத்தை மேம்படுத்தவும் செய்கிறது என்கிறது, அந்த ஆய்வுகள். உடற்பயிற்சி செய்யும்போது டிரிப்டோபான் (triptophan) என்ற வேதிப்பொருளை மூளை உற்பத்தி செய்கிறது. அதுதான் அவர்களது ஆழ்ந்த தூக்கத்திற்கு உதவுகிறது. இந்த வேதிப்பொருள் மனதை அமைதிப்படுத்தும் பணியையும் செய்கிறது. ஆனால் மாலை நேரத்தில் கடுமையான உடற்பயிற்சிகளை மேற்கொள்ளக்கூடாது. அது சிலருக்கு தூக்கத்தில் தொந்தரவை ஏற்படுத்தும் என்று ஆய்வு குறிப்பிடுகிறது. உடலுக்கு அதிக வேலை கொடுப்பதே அதற்கான காரணமாக அமைகிறது. அதனால் மாலை நேரங்களில் கடுமையான உடற்பயிற்சிகளை செய்யவேண்டாம்.

அதிக எடை கொண்ட கருவிகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தவர்களையும், குறைந்த எடைகொண்ட கருவிகளை பயன்படுத்தி உடற்பயிற்சி செய்தவர்களையும் ஆராய்ச்சிக்கு உட்படுத்தியபோது, குறைந்த எடையை பயன்படுத்தி மிதமாக உடற்பயிற்சி செய்தவர்களிடம் மனஅமைதியும், தன்னம்பிக்கையும் அதிகரித்திருப்பதாகவும் ஆய்வு சொல்கிறது.

மேலும் செய்திகள்