செய்தி தரும் சேதி - 45. மூளைக்கு ‘மொய் விருந்து’
நல்ல புத்தகம் கையில் கிடைத்தால் தனிமையும் இனிமையாகும். பூகம்பத்தின் நடுவிலும் புத்தகத்தை வாசிக்கும் வல்லமை பெற்றவர்களை நான் பார்த்திருக்கிறேன்.
நல்ல புத்தகம் கையில் கிடைத்தால் தனிமையும் இனிமையாகும். பூகம்பத்தின் நடுவிலும் புத்தகத்தை வாசிக்கும் வல்லமை பெற்றவர்களை நான் பார்த்திருக்கிறேன்.நல்ல புத்தகம் விரக்திக்கு மருந்து, அறிவுக்கு விருந்து. புத்தகங்கள் புதிய உலகத்திற்கான சன்னல்களைத் திறந்து விடுகின்றன. அங்கு காற்று வருவதும், நாற்றம் வருவதும் வாசிக்கும் புத்தகத்தைப் பொருத்து அமைகிறது.தூக்குக் கயிறு தொங்கிக்கொண்டிருக்கும்போதுகூட அடுத்த நாள் தேர்வுக்கு படிப்பதைப்போல புத்தகத்தை வாசித்துக்கொண்டிருந்தார் பகத்சிங்.ஷேக்ஸ்பியரின் ‘புயல்’ நாடகத்தில் பிராஸ்பிரோ என்கிற மன்னன் சிம்மாசனத்தை விட நூலகத்தை அதிகம் நேசித்ததால் அவன் தம்பி நாட்டை அபகரித்துக்கொண்டதாய் எழுதியிருப்பார்.
புத்தக உலகத்தில் நுழைபவர்களுக்கு சிறகுகள் முளைத்து விடுவதால் அவர்களுக்கு சிம்மாசனங்கள் தேவையில்லை.
புத்தகங்கள் வாசிப்பவர்களின் அனுபவங்களுக்கேற்ப அர்த்தம் கொள்ளப்படுகின்றன. திருக்குறளை முதலாம் வகுப்பிலிருந்து முனைவர் பட்ட ஆய்வு வரை வாசித்து நுகர முடியும். அனுபவத்திற்கும், விசாரத்திற்கும் ஏற்ப ஆழமும், விரிவும் உணரப்படும்.
‘இரண்டு மனிதர்கள் ஒரே புத்தகத்தை ஒருபோதும் வாசிப்பதில்லை’ என்றார் எட்மண்ட் வில்சன். ஒருவருக்கு அற்புதமாகத் தெரியும் புத்தகம் இன்னொருவருக்கு அற்பமாகத் தெரியலாம்.
‘நாம் எப்போதாவது அதிசயத்தக்க அறிவாற்றலுடன் ஒருவரை சந்தித்தால் அவர் எந்த மாதிரியான புத்தகங்களை வாசிக்கிறார் என்பதைக் கேட்டறிய வேண்டும்’ என்கிறார் எமர்சன். ‘புத்தகத்தைப்போல விசுவாசமான நண்பர் இல்லை’ என்றார் ஹெமிங்வே. ‘ஆர்வத்தினால் ஒருவர் புத்தகத்தை வாசிக்க விரும்புவதற்கும், களைப்படைந்தவன் ஒரு புத்தகத்தை வாசிக்க விரும்புவதற்கும் பெரும் வேறுபாடு இருக்கிறது’ என்றார் செஸ்டர்டன்.
‘நல்ல புத்தகத்தின் சிறந்த அம்சம் வரிகளில் இல்லை, வரிகளின் இடையில் இருக்கின்றது’ என்பது சுவீடன் நாட்டுப் பழமொழி. ‘ஒரே ஒரு புத்தகத்தை எப்போதும் வாசிப்பவரிடம் எச்சரிக்கையாய் இரு’ என்றார் தாமஸ் அக்வினாஸ். சிலர் உலக உண்மைகள் அனைத்தும் ஒரே புத்தகத்தில் இருப்பதாகவும், அதைத் தாண்டி எதையும் வாசிக்க வேண்டியதில்லை என்ற எண்ணம் கொண்டவர்களாகவும் இருப்பார்கள். அப்படிப்பட்டவர்கள் ஆபத்தானவர்கள்.
புத்தகங்களை வாசித்துக்கொண்டே இருக்க வேண்டும், அப்போது அறிவு தொடர்ந்து ஊறும், நாம் சிந்தித்திராத திக்குகளில் மனம் பயணிக்கும், நமக்குள் ஒளிந்துகொண்டிருக்கும் ஆற்றல் வெளிப்படும் என்பதையெல்லாம் ‘தொட்டனைத் தூறும் மணற்கேணி’ என்கிற ஒற்றை வரியில் திருவள்ளுவர் தெரிவித்து விட்டார்.
புத்தகங்களை வாசித்துக்கொண்டிருந்தால் நம் எண்ணங்கள் மேன்மையடையும். நம்மையும் அறியாமல் இதயத்திற்குள் கசிந்து நம் செயல்களை செம்மைப்படுத்தும். எந்தப் பிரச்சினை வந்தாலும் ஆழ்ந்து சிந்தித்து முடிவெடுக்க முடியும். நாம் ஒரு புதினத்திலோ, கட்டுரையிலோ படித்த கருத்து சிக்கலில் உதவும். நாம் வாசிக்கும் நூல்கள் நம்மைத் துணிவுள்ளவராக மாற்றும். நிறைய வாசிப்பவர்கள் எதையும் எதிர்கொள்ளத் தயாராக இருப்பார்கள். அவர்கள் பேச்சு அனைவருக்கும் சுவாரஸ்யமாக இருக்கும். எளிதில் எதிராளிகளை ஈர்த்து விடுவார்கள். அறிவியலில் உள்ள கருத்துக்கு, இலக்கியத்திலிருந்து இணையான சிந்தனையை அவர்களால் எண்ணிப் பார்க்க முடியும்.
இன்று வாசிக்கும் பழக்கம் குறைந்து வருகிறது. ஓய்வு நேரத்தை மின்னணு சாதனங்கள் விழுங்கி விடுகின்றன. பொழுதுபோக்கிலேயே பொழுது போய் விடுகிறது. வருகிற அழைப்பு களுக்கு பதில் சொல்லியே நேரம் விரயமாகி விடுகிறது. எதிரே இருப்பவர்கள் எந்த மனநிலையில் இருக்கிறார்கள் என்கிற விவஸ்தை இல்லாமல் நீட்டி முழக்குபவர்கள் அதிகம்.
மாணவர்கள் மதிப்பெண் களைத் துரத்தும் மும்முரத்தில், மூளையை வலுவாக்கும் முயற்சியில் இதயத்தைத் தவற விடுகிறார்கள். பணியில் மேம்பாடடைவதற்கும், பதவி உயர்வைப் பெறுவதற்கும் படித்தால் போதும் என எண்ணும் இளைஞர்கள் ஏராளம்.
சில இளைஞர்கள் நவீன மின்னணு சாதனத்தில் புத்தகங்களைப் பதிவேற்றி படித்து மகிழ் கிறார்கள். அதிலும் ஒரு வசதி இருக்கிறது. ஆயிரக்கணக்கான புத்தகங்களை சின்ன சாதனத்தில் அடைத்து விடலாம்.
வாடகை வீட்டை மாற்றும்போது தொல்லைகள் இல்லை. நூல்களை வெள்ளம் பாதிக்குமோ என்றும், கரையான்கள் அரிக்குமோ என்றும் கவலைப்பட வேண்டியதில்லை.
ஒவ்வொரு முறை வீடு மாற்றும்போதும் எனக்கு நெருக்கடி நேரிடும், புத்தகங்களை எங்கு வைப்பது என்று. அரசினர் குடியிருப்பிலிருந்து தனியார் வீட்டிற்கு அண்மையில் இருப்பை மாற்றியபோது பல புத்தகங்கள் பழுதாகி இருப்பதைப் பார்த்தேன். தொடர்ந்து பராமரிப்பது அவசியம். என் மொத்தப் பொருட்களைவிட புத்தகங்களின் சுமை அதிகம்.
நூல்களை அவ்வப்போது வெயிலில் வைத்து குளிர்காயச் செய்ய வேண்டும். அட்டை என்னும் ஆடை உடுத்தி அழகு செய்ய வேண்டும். அந்துருண்டைகளை சந்துகளில் போட்டு சவரட்சணை செய்ய வேண்டும். அவ்வப்போது காற்று படும்படி நகர்த்தி வைக்க வேண்டும்.
இத்தனை சிரமங்கள் இருந்தாலும் புத்தகங்களை வாசிப்பது தனி சுகம். சாய்ந்தும் படிக்கலாம், நடந்தும் படிக்கலாம். விருப்பமான இடத்தில் கோடிட்டு அடையாளப்படுத்தலாம். மின்சாரமில்லாத இடத்திலும் போக்குவரத்து சந்தடியிலும் நூலை வாசிப்பது எளிது. புத்தகத்தை வாசித்து வளர்ந்த தலைமுறைக்கு சாதனங்கள் சாதகமாக இருப்பதில்லை.
வாசிக்கத் தொடங்கினால் அடுத்த தலைமுறை பாய்ச்சலில் செல்லும் வேகத்தை எட்டும். மாநகரங்களில் வாசிப்புக்காக குவிகிற நூல்கள் அதிகம். அங்கு நேரப் பற்றாக்குறை. போக்குவரத்திலேயே நாளின் பாதிப் பகுதி சென்று விடுகிறது. சென்று வந்த களைப்பில் மீதிப் பகுதி கழிந்து விடுகிறது.
கிராமங்களில் படிப்பதற்கு புத்தகங்கள் குறைவு. நேரமோ நிரம்ப இருக்கிறது. அங்கு நூல்கள் கிடைத்தால் வரி விடாமல் வாசிப்பவர்கள் உண்டு. அரிவாளால் சாதிக்காததை அறிவால் சாதிக்க முடியும் என்கிற எண்ணத்தை மட்டும் அவர்கள் இதயத்தில் ஏற்றி விட்டால் அமைதியான உலகத்தை சிருஷ்டித்து விடலாம்.
திருமணங்களில் அன்பளிப்பு தருதல் தொன்றுதொட்ட பழக்கம். மணமக்களைப் பெற்றோருக்கு ஆகியிருக்கும் செலவில் ஒரு பகுதியை ஈடுகட்டவாவது இந்த அன்பளிப்பு உதவும் என்கிற அடிப்படையில் நோட்டுப் போட்டு, யார் என்ன தந்தார்கள் என்று எழுதி வைக்கும் வழக்கம் இன்னமும் இருக்கிறது. அவர்கள் வீட்டுத் திருமணத்தில் அது திருப்பித் தரப்படும். வட்டியில்லாத கடனாக, குட்டி போடாத முதலாக அவை இருந்தன. ஒலிபெருக்கிகளில் தந்தவர் விவரங்களை வாசிக்கிற கிராமங்களும் உண்டு.
இன்று எங்கு பார்த்தாலும் மலர்க்கொத்துகள். இத்தனை கொத்துகளை என்ன செய்வார்கள் என்று நான் சிந்திப்பதுண்டு. இப்போது அவற்றிலும் அந்தஸ்து வந்து விட்டது. இல்லாவிட்டால் தேவையற்ற பொருட்களை ஜிகினா காகிதத்தில் சுற்றி தந்து விடுகிறார்கள். அந்தப் பொருட்கள் மேடையில் அணிவிக்கும் சால்வை களைப்போல ஒரு சுற்று வருகின்றன. நமக்குப் போர்த்தப்பட்ட சால்வை எத்தனை தோள்களைத் தாண்டி வந்தது என்பது தெரியாது. சிலருக்கு சிகை திருத்தும்போது துணியைப் போர்த்தினால்கூட சால்வை போட்டதைப்போல சிகரம் ஏறிய திருப்தி.
பொருட்களைத் தருவதைவிட பொருளைத் தருவது மேல் என்பார்கள் அனுபவம் உள்ளவர்கள். அது உடனடியாகப் பயன்படும், தேவையானதை அவர்களே வாங்கிக் கொள்வார்கள் என்பதே காரணம்.
சில மாவட்டங்களில் பணியாற்றுகிறபோது ‘மொய் விருந்து’ என்ற ஒன்றைக் கேள்விப்பட்டேன். அவசரமாகப் பணம் தேவை என்றால் மொய் விருந்து வைப்பதாக அழைப்பு அனுப்புவார்கள். அவசியம் கலந்துகொண்டு நிதியுதவி செய்ய வேண்டும். தராதவர்களை ஏளனப்படுத்துவதும் உண்டு. சிரமத்திலிருப்பவர்கள் சிரத்தை எடுத்துக்கொண்டு இதை நடத்தி இக்கட்டிலிருந்து மீள்வார்களாம். சுதாரித்துக்கொண்ட பிறகு தனக்கு வழங்கியவர் களுக்கு அவர்கள் வீட்டு விசேஷங்களில் திருப்பித் தந்து விடுவார்களாம்.
இந்த நடைமுறை தமிழகத்தில் மட்டுமில்லை, கேரளாவில் மலபார் பகுதியிலும் இது பிரசித்தம். ‘பணம் பயட்டு’ என்றும் ‘குறிக்கல்யாணம்’ என்றும் மலையாளத்தில் இதற்குப் பெயர். ஊரகப் பகுதிகளில் வீடு கட்டுவதற்கும், பெண்களைத் திருமணம் செய்து கொடுப்பதற்கும், வளைகுடாப் பகுதிகளுக்கு மகன்களை அனுப்புவதற்கும் இந்தப் பெயரில் நிதி திரட்டும் பழக்கம் உண்டு.
பணம் பயட்டின் நீட்சியாக ‘புத்தகப் பயட்டு’ என்கிற பெயரில் குட்டியாடி என்கிற இடத்தில் ஆசிரியர்களும், மாணவர்களும் பத்தாயிரம் புத்தகங்களை பொதுமக்களிடமிருந்து நூலகத்திற்காகத் திரட்டியிருக்கிறார்கள். அந்நூலகத்திற்கு மறைந்த மக்கள் மனாதிபதி அப்துல் கலாமின் பெயர்.
ஜமால் குட்டியாடி என்கிற தலைமை ஆசிரியர் இந்தப் ‘புத்தகப் பயட்டு’ நடைமுறையை அறிமுகப்படுத்தியிருக்கிறார். மிகச் சிறந்த பழக்கங்கள் களத்தில் இருப்பவர்களிடமிருந்தே உதயமாகின்றன.
எண்ணற்றோர் புத்தகங்களை வைத்துக்கொண்டு பாதுகாக்க இடமில்லாமல் தவிக்கிறார்கள். ‘என்னிடம் இருக்கும் என் தந்தை சேர்த்த புத்தகங்களை என்ன செய்வது’ என்று கேட்பவர்கள் உண்டு. தந்தையின் ரசனை மகனுக்கு இருக்க வேண்டுமென்று கட்டாயப்படுத்தவா முடியும்!
புத்தகச் சேகரிப்பைத் தமிழகத்திலும் கல்வித்துறை தொடங்கியிருக்கிறது. ‘பயனற்ற நூல்களை அளிக்காமல், தேவைப்பட்டால் பணம் கொடுத்து நல்ல நூல்களை வழங்க அனைவரும் முன்வர வேண்டும்’ என்பதே இச்செய்தி தரும் சேதி.
ஏனென்றால் இது வெறும் காகித தானம் அல்ல. எதிர்காலத் தலைமுறைக்கான ஆயுத தானம்.
(செய்தி தொடரும்)