பனி மூட்டத்தால் ரெயில் சேவை பாதிப்பு வாசிந்தில் பயணிகள் ரெயில்மறியல் போராட்டம்

பனி மூட்டத்தால் ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டதால் வாசிந்தில் பயணிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

Update: 2017-12-09 23:00 GMT

மும்பை,

பனி மூட்டத்தால் ரெயில் சேவை பாதிப்பு ஏற்பட்டதால் வாசிந்தில் பயணிகள் ரெயில் மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

ரெயில்சேவை பாதிப்பு

மும்பையில் கடந்த சில நாட்களாக குளிரின் தாக்கம் அதிகரித்து உள்ளது. குறிப்பாக நேற்று காலை மும்பை மற்றும் அதையொட்டிய மாவட்டங்களில் பனி மூட்டம் அதிகமாக இருந்தது. எதிரே வரும் வாகனங்கள் தெரியாத அளவிற்கு பனி மூட்டம் இருந்ததால் சாலைகளில் வாகனங்கள் மெதுவாக சென்றன. இதேபோல மத்திய ரெயில்வே வழித்தடத்தில் நேற்று அதிகாலை பனி மூட்டம் காரணமாக ரெயில் சேவை பாதிக்கப்பட்டது. ரெயில்கள் 40 நிமிடங்கள் வரை தாமதமாக இயக்கப்பட்டன.

பயணிகள் மறியல்

இதனால் ஆத்திரமடைந்த பயணிகள் வாசிந்த் ரெயில்நிலையத்தில் ரெயில்மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். தகவல் அறிந்து சென்ற ரெயில்வே அதிகாரிகள் பயணிகளுடன் பேச்சு வார்த்தையில் ஈடுபட்டனர். இன்று முதல் மின்சார ரெயில்கள் சரியான நேரத்தில் இயக்கப்படும் என அதிகாரிகள் உறுதியளித்ததை அடுத்து பயணிகள் கலைந்து சென்றனர். காலை 8 மணிக்கு பிறகு மத்திய ரெயில்வே வழித்தடத்தில் ரெயில்கள் வழக்கம் போல இயக்கப்பட்டன.

மேலும் செய்திகள்