ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

ஆத்தூர், கெங்கவல்லி பகுதிகளில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

Update: 2017-12-09 22:45 GMT

ஆத்தூர்,

விடுதலை சிறுத்தைகள் கட்சி தலைவர் திருமாவளவனுக்கு மிரட்டல் விடுக்கும் வகையில் இந்து முன்னேற்ற கழக நிறுவனர் கோபிநாத் பேசியதாக கூறி, அவரை கைது செய்ய வலியுறுத்தி, அந்த கட்சியினர் நேற்று பல்வேறு இடங்களில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். ஆத்தூர் உதவி கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்ட செய்தி தொடர்பாளர் கோ.நாராயணன் தலைமை தாங்கினார். நகர செயலாளர் சாமுண்டி வரவேற்றார். சங்கர், வெற்றிமணி, பெரியசாமி, ரமேஷ், பேரறிவாளன், குமரவேல், செல்வம், குமார் வளவன், கருப்பையா உள்பட பலர் கலந்து கொண்டு கோரிக்கையை வலியுறுத்தி பேசினார்கள். முடிவில் திருப்பூர் கோபிநாத்தின் உருவபொம்மையை விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் எரித்தனர். இதேபோல் ஆத்தூர் பழைய பஸ் நிலையத்திலும் அந்த கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

கெங்கவல்லி பேரூராட்சி அண்ணா சிலை அருகில் விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஒன்றிய செயலாளர் மனோகரன் தலைமையில் இதே கோரிக்கையை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடத்தினார்கள். இதில் மாவட்ட செயலாளர் முத்து, நாராயணன், பேரறிவாளன் மற்றும் கட்சி நிர்வாகிகள் கலந்து கொண்டனர்.

மேலும் செய்திகள்