மத்திய, மாநில அரசுகளை கண்டித்து சேலத்தில் நாம் தமிழர் கட்சியினர் ஆர்ப்பாட்டம்

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை காப்பாற்ற தவறியதாகவும், மீட்பு பணியில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாகவும் கூறி சேலத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது.

Update: 2017-12-09 22:45 GMT

சேலம்,

கன்னியாகுமரி மாவட்டத்தில் ஒகி புயலால் பாதிக்கப்பட்ட மீனவர்களை காப்பாற்ற தவறியதாகவும், மீட்பு பணியில் மெத்தனமாக செயல்படும் மத்திய, மாநில அரசுகளை கண்டிப்பதாகவும் கூறி சேலத்தில் நேற்று நாம் தமிழர் கட்சி சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சேலம் கலெக்டர் அலுவலகம் முன்பு நடந்த ஆர்ப்பாட்டத்திற்கு வடக்கு மாவட்ட செயலாளர் தங்கதுரை தலைமை தாங்கினார். மேற்கு மாவட்ட செயலாளர் பாலசுப்ரமணியம், மேற்கு மாவட்ட தலைவர் முருகன், பாண்டியன் உள்பட கட்சியினர் பலர் கலந்து கொண்டனர். பின்னர் அவர்கள் மத்திய, மாநில அரசுகளை கண்டித்து கோ‌ஷங்களை எழுப்பினர்.

மேலும் செய்திகள்