2 குழந்தைகளை கிணற்றுக்குள் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்ற பெண்
பல்லடம் அருகே 2 குழந்தைகளை கிணற்றில் வீசி விட்டு கிணற்றில் குதித்து பெண், சரியான நேரத்தில் தொழிலாளர்கள் பார்த்ததால், 3 பேரையும் அவர்கள் உயிருடன் மீட்டனர்.
பொங்கலூர்,
திருப்பூர் கணபதிபாளையத்தை சேர்ந்தவர் முருகானந்தம் (வயது 40). பனியன் நிறுவனத்தில் கட்டிங் மாஸ்டராக வேலை செய்து வருகிறார். இவரது மனைவி மகாலட்சுமி (35). இவர்களுக்கு பிருந்தா (8) மற்றும் சன்மதி (4) ஆகிய 2 பெண் குழந்தைகள் உள்ளனர். பிருந்தா அருகில் உள்ள அரசு பள்ளியில் 3-ம் வகுப்பும், சன்மதி அங்குள்ள தனியார் பள்ளியில் எல்.கே.ஜி. யும் படித்து வருகிறார்கள்.
இந்த நிலையில் நேற்று காலை முருகானந்தம் சபரி மலைக்கு செல்வதற்காக மாலை அணிந்து விட்டு வேலைக்கு சென்று விட்டார். இந்த நிலையில் நேற்று மதியம் சுமார் 2 மணியளவில் அந்த பகுதியில் உள்ள ஒரு கிணற்றில் மகாலட்சுமி தனது 2 குழந்தைகளையும் தூக்கி வீசிவிட்டு தானும் உள்ளே குதித்துள்ளார். அப்போது அந்த வழியாக சென்ற பனியன் நிறுவன தொழிலாளர்கள் இதை பார்த்து அதிர்ச்சியடைந்து சத்தம் போட்டவாரே கிணற்று பக்கம் ஓடி வந்து கிணற்றை எட்டிப்பார்த்தனர்.
அப்போது கிணற்றுக்குள் ஒரு பெண்ணும் மற்றும் இரண்டு குழந்தைகளும் தண்ணீரில் தத்தளித்துக்கொண்டிருந்ததை பார்த்தனர். உடனடியாக அந்த பனியன் தொழிலாளர்கள் உள்ளே குதித்து 2 பெண் குழந்தைகளையும் காப்பாற்றி மேலே கொண்டு வந்தனர். குழந்தைகளின் தாயை காப்பாற்ற முயன்றனர். ஆனால் அவரை மேலே கொண்டு வருவதில் சிரமம் ஏற்பட்டதால் இது குறித்து திருப்பூர் தெற்கு தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் கொடுத்தனர்.
அதைத்தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த தீயணைப்பு துறையினர் கயிறு மூலம் மகாலட்சுமியை மேலே கொண்டு வந்தனர். பின்னர் மகாலட்சுமிக்கு லேசான மயக்கம் இருந்ததால் ஆம்புலன்ஸ் மூலம் திருப்பூர் அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டுசெல்லப்பட்டு அங்கு அவருக்கு சிகிச்சை அளிக்கப்பட்டது. மகாலட்சுமி எதற்காக தனது 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசிவிட்டு தற்கொலைக்கு முயன்றார்? என்பது குறித்து பல்லடம் போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த சம்பவம் அந்த பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. 2 குழந்தைகளையும் கிணற்றில் வீசி விட்டு, மகாலட்சுமி கிணற்றில் குதித்த போது, சரியான நேரத்தில் தொழிலாளர்கள் பார்த்ததால் அவர்கள் 3 பேரும் உயிருடன் மீட்கப்பட்டனர்.