கிருஷ்ணகிரியில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கூட்டம்

கிருஷ்ணகிரியில் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக் கூட்டத்தில் மாநில தேர்தல் ஆணையர் மாலிக் பெரோஸ்கான் கலந்து கொண்டார்.

Update: 2017-12-09 22:45 GMT
கிருஷ்ணகிரி,

கிருஷ்ணகிரி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் ஊரக மற்றும் நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளின் வார்டுகளை மறுவரையறை செய்தல் மற்றும் உள்ளாட்சி தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்து ஆய்வுக் கூட்டம் நேற்று நடந்தது. இந்த கூட்டத்திற்கு தமிழ்நாடு மாநில தேர்தல் ஆணையர் மற்றும் மறுவரையறை ஆணைய தலைவர் எம்.மாலிக் பெரோஸ் கான் தலைமை தாங்கினார். மாவட்ட கலெக்டர் கதிரவன் முன்னிலை வகித்தார்.

அப்போது, உள்ளாட்சி அமைப்புகளில் நடைபெறும், வார்டுகள் மறுவரையறை குறித்த பணிகளை தமிழ்நாடு மறுவரையறை ஆணையத்தின் வழிகாட்டுதல் படி மிகச் சரியாக எவ்வித இடர்பாடுகளுக்கும் இடமளிக்காத வண்ணம் மேற்கொள்ள வேண்டும். மறுவரையறை செய்தல் தொடர்பாக மக்கள் பிரதிநிதிகளுடன் கருத்து கேட்கும் விளக்க கூட்டத்தினை கலெக்டர் தலைமையில் நடத்திட வேண்டும் என தேர்தல் ஆணையர் அறிவுறுத்தினர்.

இதைத் தொடர்ந்து, மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் பாதுகாப்பு அறையில் இருப்பு வைக்கப்பட்டுள்ள மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள், கிருஷ்ணகிரி ஊராட்சி ஒன்றியத்தில் இருப்பு வைக்கப்பட்டுள்ள, உள்ளாட்சி தேர்தலுக்கு பயன்படுத்த கூடிய வாக்கு பெட்டிகள், தேர்தல் பொருட்கள் இருப்பு குறித்து, மாநில தேர்தல் ஆணையர் ஆய்வு மேற்கொண்டார்.

இந்த ஆய்வின்போது, மாவட்ட வருவாய் அலுவலர் சாந்தி, திட்ட இயக்குநர் நரசிம்மன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர். 

மேலும் செய்திகள்