மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விரைவாக நியாயமான நீதி வழங்கப்படுகிறது நீதிபதி பேச்சு
மக்கள் நீதிமன்றத்தின் மூலம் விரைவாக நியாயமான நீதி வழங்கப்படுகிறது என்று மாவட்ட முதன்மை நீதிபதி தெரிவித்துள்ளார்.
வேலூர்,
வேலூர் சத்துவாச்சாரியில் உள்ள ஒருங்கிணைந்த கோர்ட்டு வளாகத்தில் உள்ள மாற்றுமுறை தீர்வு மையத்தில் நேற்று மக்கள் நீதிமன்றம் நடந்தது. நிகழ்ச்சிக்கு மாவட்ட முதன்மை நீதிபதி (பொறுப்பு) வெற்றிச்செல்வி தலைமை தாங்கினார். சார்பு நீதிபதி அஜீம் முன்னிலை வகித்தார். தொழிலாளர் நீதிமன்ற நீதிபதி செல்வசுந்தரி, மகளிர் நீதிமன்ற நீதிபதி மதுசூதனன், நீதித்துறை நடுவர் நீதிமன்ற நீதிபதி கனகராஜ், குடும்பநல நீதிபதி லதா, முதன்மை சார்பு நீதிபதி தாமோதரன், முதன்மை மாவட்ட உரிமையியல் நீதிபதி அன்வர்சதாத் ஆகியோர் வாழ்த்தி பேசினர். நிகழ்ச்சியில் மாவட்ட முதன்மை நீதிபதி வெற்றிச்செல்வி பேசியதாவது:-
இந்திய அரசியலமைப்பு சட்டப்படி தேசிய அளவிலான மக்கள் நீதிமன்றம் நடந்து வருகிறது. இந்த மக்கள் நீதிமன்றத்தின் மூலம் வங்கி சம்பந்தப்பட்ட வழக்குகள், காப்பீடு சம்பந்தப்பட்ட வழக்குகள் உள்பட பல்வேறு வழக்குகள் முடித்து வைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு நாடு முழுவதும் 9 லட்சம் வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. இந்த நீதிமன்றத்தின் மூலம் பல்வேறு வழக்குகளுக்கு விரைவாக நியாயமான நீதி வழங்கப்பட்டுள்ளது. நம் நாட்டில் மக்கள் தொகை அதிகமாக காணப்படுகிறது. அதனால் பிரச்சினைகளும், வழக்குகளும் அதிகமாக உள்ளது.
வேலூர் மாவட்டத்தில் கடந்த அக்டோபர் மாதம் நடந்த மக்கள் நீதிமன்றத்தில் 3,327 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டு, 8 கோடியே 38 லட்சத்து 42 ஆயிரத்து 464 ரூபாய் பாதிக்கப்பட்டவர்களுக்கு வழங்க உத்தரவிடப்பட்டுள்ளது.
இன்று (நேற்று) நடைபெற்ற மக்கள் நீதிமன்றத்தில் திருப்பத்தூரை சேர்ந்த நித்தியானந்தம் என்பவரின் நிலத்தை கடந்த 2004-ம் ஆண்டு கையகப்படுத்தியது தொடர்பாக அவருக்கு இழப்பீடாக ரூ.1 கோடியே 38 லட்சத்து 89 ஆயிரத்து 564-க்கான காசோலை வழங்கப்பட்டது.
இவ்வாறு அவர் பேசினார்.
நிகழ்ச்சியில் ஓய்வு பெற்ற நீதிபதி லட்சுமி, மாஜிஸ்திரேட்டுகள் வெற்றிமணி, அலிசியா, லாவண்யா, அரசு கூடுதல் சிறப்பு வக்கீல் உமாசங்கர், மாவட்ட பார் அசோசியேசன் சங்க தலைவர் பாஸ்கரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
முடிவில் சட்டப்பணிகள் ஆணைக்குழு நிர்வாக அலுவலர் கேசவன் நன்றி கூறினார்.