தாம்பரத்தில் ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு
தாம்பரம் சி.டி.ஓ. காலனியில் ஆசிரியை வீட்டில் நகை, பணம் திருட்டு போனது.
தாம்பரம்,
சென்னையை அடுத்த தாம்பரம் சி.டி.ஓ. காலனி மாரியம்மன் நகர் கணபதி தெருவை சேர்ந்தவர் சந்திரசேகர். இவரது மனைவி லதா (வயது 45). அதே பகுதியில் உள்ள பள்ளியில் ஆசிரியையாக உள்ளார். இவரது கணவர் வெளியூரில் உள்ளார். நேற்று முன்தினம் காலை லதா வீட்டை பூட்டிவிட்டு வேலைக்கு சென்று விட்டார்.
வேலை முடிந்ததும் அவர் வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் முன்பக்க கதவு உடைக்கப்பட்டு இருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ உடைக்கப்பட்டு 5 பவுன் நகை, ரூ.10 ஆயிரம், மடிக்கணினி மற்றும் செல்போன் ஆகியவற்றை மர்ம நபர்கள் திருடிச்சென்றது தெரியவந்தது. இதுதொடர்பாக லதா அளித்த புகாரின்பேரில் தாம்பரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.