மதுவில் வி‌ஷம் கலந்து குடித்த தொழிலாளி சாவு

மதுவில் வி‌ஷம் கலந்து குடித்த தொழிலாளி சாவு

Update: 2017-12-09 22:15 GMT

அரியலூர்,

அரியலூர் அருகேயுள்ள கூடலூர் கிராமத்தை சேர்ந்தவர் சிவசாமி. இவரது மகன் முருகானந்தம் (வயது 34). கூலித்தொழிலாளி. கடந்த வாரம் சென்னையில் கூலிவேலை செய்வதற்கு இவர், சென்றார். நேற்று முன்தினம் அரியலூருக்கு வந்து கூடலூருக்கு செல்லும் போது, பாலம்பாடி கிராமத்தில் உள்ள மதுபானகடையில் மதுவாங்கி கொண்டு அதில் பூச்சி மருந்தை கலந்து குடித்து அதே இடத்தில் மயங்கினார். இதைக்கண்ட அங்கிருந்தவர்கள் உடனடியாக முருகானந்தத்தை மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு ஆஸ்பத்திரியில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலன் அளிக்காமல் நேற்று காலை முருகானந்தம் பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து அரியலூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

மேலும் செய்திகள்