விருகம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு
சென்னை விருகம்பாக்கத்தில் தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 10 பவுன் நகை திருட்டு போனது.
பூந்தமல்லி,
சென்னை விருகம்பாக்கம், சாலிகிராமம் காந்தி நகரை சேர்ந்தவர் வெங்கட்ராமன் (வயது 55). இவர் தனியார் நிறுவனத்தில் வரி ஆலோசகராக பணிபுரிந்து வருகிறார். இவரது மனைவி ராஜேஷ்வரி (39). தனியார் பள்ளியில் ஆசிரியராக வேலைப்பார்த்து வருகிறார். நேற்று முன்தினம் காலை இருவரும் வேலைக்கு சென்று விட்டனர். வேலை முடிந்து இரவு வீட்டிற்கு வந்தபோது கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்தது.
இதைக்கண்டு அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டிற்குள் சென்று பார்த்தபோது பீரோ திறக்கப்பட்டு, அதில் இருந்த 10 பவுன் நகைகள் திருட்டு போனது தெரியவந்தது. இந்த சம்பவம் குறித்து விருகம்பாக்கம் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.