குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை சுற்றுலா பயணிகள் 2–வது நாளாக குளிக்க தடை
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால், சுற்றுலா பயணிகள் 2–வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
தென்காசி,
குற்றாலம் மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறையாததால், சுற்றுலா பயணிகள் 2–வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டுள்ளது.
அருவிகளில் வெள்ளப்பெருக்குநெல்லை மாவட்டம் குற்றாலம் பகுதிகளில் நேற்று முன்தினம் இரவு பலத்த மழை பெய்தது. இதனால் அனைத்து அருவிகளிலும் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. வெள்ளப்பெருக்கு ஏற்படும் போது குளிப்பதால் நீரின் அழுத்தம் அல்லது தண்ணீரில் அடித்து வரப்படும் சிறு, சிறு மரத்தடிகள், கற்கள் போன்றவற்றால் ஆபத்து ஏற்படும். இதனால் சுற்றுலா பயணிகள் குளிக்க போலீசார் தடை விதித்தனர்.
2–வது நாளாக குளிக்க தடைநேற்று காலையிலும் வெள்ளப்பெருக்கு தொடர்ந்து நீடித்தது. மெயின் அருவி, ஐந்தருவியில் வெள்ளப்பெருக்கு குறையவில்லை. இதனால் 2 அருவிகளிலும் சுற்றுலா பயணிகள் 2–வது நாளாக குளிக்க தடை விதிக்கப்பட்டது. பழைய குற்றாலம், புலியருவி ஆகியவற்றில் சுற்றுலா பயணிகள் குளித்தனர். தற்போது சபரி மலைக்கு செல்லும் பக்தர்கள் குற்றாலம் வந்து செல்கிறார்கள். அவர்கள் மெயின் அருவி மற்றும் ஐந்தருவியில் குளிக்க முடியாமல் திரும்பி சென்றனர். வெள்ளப்பெருக்கு குறைந்ததும் சுற்றுலா பயணிகள் குளிக்க அனுமதிக்கப்படுவார்கள் என போலீசார் தெரிவித்தனர்.