விழுப்புரம்: சொந்த செலவிலேயே தடுப்பணை கட்டும் கிராம மக்கள்
விழுப்புரம் மலட்டாற்றின் குறுக்கே கிராம மக்கள் ஒருங்கிணைந்து தங்களது சொந்த செலவிலேயே தடுப்பணை கட்டி வருகின்றனர்.;
விழுப்புரம்,
விழுப்புரம் மாவட்ட மக்களின் குடிநீர் ஆதாரமாகவும், விவசாயத்திற்கு முக்கிய ஆதாரமாகவும் தென்பெண்ணையாறு விளங்கி வருகிறது. பருவமழை காலங்களில் தென்பெண்ணையாற்றில் பெருக்கெடுத்து ஓடும் தண்ணீர், அணைக்கட்டுகளில் இருந்து பாசன வாய்க்கால் வழியாக திறந்து விடப்பட்டு கிராமப்புறங்களில் உள்ள ஏரிகளுக்கு சென்று நிரம்பும். அந்த தண்ணீரை கோடை காலங்களில் விவசாயம் செய்ய பயன்படுத்தி வருகின்றனர்.
கடந்த 2015-ம் ஆண்டு பெய்த பருவமழையை தொடர்ந்து 20 ஆயிரம் கன அடி வரை ஆற்றில் தண்ணீர் சென்ற நிலையில், மழை நின்று ஒரே மாதத்தில் ஆற்றில் தண்ணீர் முற்றிலும் வற்றி, வறண்டு விட்டது.
மேலும் ஆற்றின் குறுக்கே கட்டப்பட்ட தடுப்பணைகள் சேதம் அடைந்ததாலும், பல்வேறு இடங்களில் விதிமுறையை மீறி அளவுக்கு அதிகமாக பள்ளம் தோண்டப்பட்டு மணல் அள்ளப்பட்டதாலும், கிளை ஆறுகளுக்கு தண்ணீர் செல்லாத நிலை ஏற்பட்டது. இதனால் ஆற்று நீர் பாசனத்தை நம்பிய விவசாயிகள் விவசாயம் செய்ய இயலாமல்போனது.
எனவே சேதமடைந்த தடுப்பணைகளை சரிசெய்யக்கோரியும், முக்கிய இடங்களில் புதிய தடுப்பணைகள் கட்டக்கோரியும் அரசுக்கு விவசாயிகள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
குறிப்பாக விழுப்புரம் அருகே தென்பெண்ணையாற்றில் இருந்து பிரியும் மலட்டாற்றின் குறுக்கே தடுப்பணை அமைக்கக்கோரி சுற்றுவட்டார கிராம மக்கள் நீண்ட காலமாக கோரிக்கை வைத்தும் அதற்கு அரசு செவிசாய்க்காததால், அரசை எதிர்பார்க்காமல் கிராம மக்கள், விவசாயிகளே ஒருங்கிணைந்து தடுப்பணை கட்டி வரும் பணியை தொடங்கியுள்ளனர். அதன் விவரம் வருமாறு:-
விழுப்புரம் அருகே தளவானூர் பகுதியில் உள்ள தென்பெண்ணையாற்றில் இருந்து மலட்டாறு பிரிந்து செல்கிறது. இந்த ஆற்றுநீரை நம்பி தளவானூர் மற்றும் சுற்றியுள்ள 100-க்கும் மேற்பட்ட கிராமங்களை சேர்ந்த லட்சக்கணக்கான ஏக்கர் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகிறது. அதுமட்டுமின்றி இந்த ஆறு அருகில் உள்ள புதுச்சேரி மாநிலம் மற்றும் கடலூர் மாவட்டத்தில் உள்ள விவசாய நிலங்களுக்கும் பாசன வசதியை அளித்து வந்தது.
ஆனால் தென்பெண்ணையாற்றில் இருந்து மலட்டாறுக்கு தண்ணீர் வரும் வாய்க்கால்கள் தூர்வாரப்படாததால் கடந்த 10 ஆண்டுகளாக மலட்டாற்றில் தண்ணீர் இல்லை. தற்போது சமீபத்தில் பெய்த பலத்த மழையினால் தென்பெண்ணையாற்றில் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடிய போதிலும் மலட்டாறுக்கு தண்ணீர் செல்லவில்லை. ஏனெனில் மலட்டாறு வாய்க்கால் தூர்வாரப்படாததால் தென்பெண்ணையாற்று தண்ணீர் வீணாக கடலில் சென்று கலந்து வருகிறது.
இதனால் விரக்தியடைந்த தளவானூர், திருப்பாச்சனூர், வடவாம்பலம் உள்ளிட்ட 100-க்கும் மேற்பட்ட கிராம மக்கள், விவசாயிகள் ஒருங்கிணைந்து அரசையும், விழுப்புரம் மாவட்ட நிர்வாகத்தையும் எதிர்பாராமல் தங்களது சொந்த செலவிலேயே பொக்லைன் எந்திரங்களை வரவழைத்து மலட்டாறு பிரியும் இடமான தளவானூரில் இருந்து திருப்பாச்சனூர் எல்லை வரை 1½ கிலோ மீட்டர் தூரத்திற்கு வாய்க்காலை தூர்வாரினார்கள்.
இதனை தொடர்ந்து மலட்டாற்றின் குறுக்கே தளவானூரில் தற்காலிகமாக தடுப்பணை கட்ட முடிவு செய்து அதற்கான பணிகளை கடந்த சில நாட்களுக்கு முன்பு தொடங்கியுள்ளனர். இதற்காக கிராம மக்கள், விவசாயிகள் ஒருங்கிணைந்து அவரவர் சொந்த பணத்தை செலவு செய்து அங்கு பொக்லைன் எந்திரங்கள், லாரிகளை வரவழைத்து மரக்கிளைகள், களிமண்ணை கொண்டு சுமார் 720 மீட்டர் நீளத்திற்கும், 8 அடி உயரத்திற்கும் தடுப்பணை கட்டும் பணியில் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
இனி வருகின்ற பருவமழை காலங்களில் ஆற்றில் தண்ணீரை சேமித்து வைத்து குடிநீர் தேவையை பூர்த்தி செய்யவும், விவசாயத்திற்காக பயன்படுத்தவும் தடுப்பணை கட்டி வருவதாகவும், இந்த தடுப்பணை மழைவெள்ளம் வந்தாலும் தாக்குப்பிடிக்கும் வகையில் கட்டப்பட்டு வருவதாகவும் கிராம மக்கள், விவசாயிகள் மகிழ்ச்சியுடன் தெரிவித்தனர்.