பசுமை கல்யாணம்
கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கோலாட் கிராமத்தில் வித்தியாசமான சட்டத்திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன.
கேரளாவின் கொல்லம் பகுதியில் உள்ள கோலாட் கிராமத்தில் வித்தியாசமான சட்டத்திட்டங்கள் கடைப்பிடிக்கப்படுகின்றன. இங்கு நடைபெறும் திருமண விழாக்களில் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை விதித்திருக்கிறார்கள். அதனால் அங்கு நடைபெறும் திருமண நிகழ்ச்சிகளில் இலை தட்டுகளும், மண் டம்ளர்களும் பயன்படுத்தப்படுகின்றன. அத்துடன் பிளாஸ்டிக் அலங்கார பொருட்களுக்கு தடை விதித்திருப்பதால், மண்டபம் மலர் அலங்காரங்களால் ஜொலிக்கிறது. இந்த சட்டத்திட்டங்களை மீறினால்... திருமண ஜோடிக்கு 2 மாதங்கள் தாமதமாகவே திருமண சான்றிதழ் வழங்கப்படுமாம்.