கடல் கடந்து வந்து தடம் பதித்தவர்
இன்று தன்னுடைய 72-வது அகவையில் அடியெடுத்து வைக்கிறார், சோனியா காந்தி. அவர் 1998-ம் ஆண்டு முதல் அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக இருக்கிறார். அந்நிய நாட்டில் பிறந்து, சுதந்திர இந்தியாவில் முதல் காங்கிரஸ் கட்சியின் தலைவராக பொறுப்பேற்றார்.
சோனியாகாந்திக்கு ஆரம்பத்தில் இருந்தே அரசியலுக்கு வருவதில் விருப்பம் இல்லை. ஆனால் கட்டாயத்தின் பேரில் அவர் அரசியலுக்குள் நுழைந்தார். அவருக்கு இரண்டுவிதமான கட்டாயங்கள் இருந்தன. ஒன்று, அவருடைய கணவரின் தம்பி சஞ்சய்காந்தியின் இறப்பு. மற்றொன்று, ராஜீவ்காந்தியை இந்திராகாந்தி அரசியலுக்கு தள்ளியது.
ராஜீவ்காந்தி அரசியலுக்கு வந்தவுடன் சோனியாகாந்திக்கும் அரசியல் பற்றிய புரிதல் ஏற்பட்டது. இந்திராகாந்தியின் இறப்புக்குப்பிறகு ராஜீவ்காந்தி முழுநேர அரசியல்வாதியாக மாறி, நாட்டின் பிரதமராக உயர்ந்தார். இந்தநிலையில் சோனியாகாந்தி தன்னுடைய கணவருக்கு உறுதுணையாக தேர்தல் சுற்றுப்பயணம், விருந்தினர்களை உபசரித்தல், வெளிநாட்டு பயணங்கள் உள்பட எல்லாவற்றிலும் கலந்துகொண்டார்.
1991-ம் ஆண்டு ராஜீவ்காந்தி கொல்லப்படுகிறார். அதன்பிறகு சோனியாகாந்தி முழுநேர அரசியலில் ஈடுபட வேண்டும் என்ற கோரிக்கை எழுந்தது. ஆனால், அதை 1998-ம் ஆண்டு வரை அவர் நிராகரித்துக் கொண்டே வந்தார். இதற்கிடையே, 1991-1996-ம் ஆண்டு வரை நரசிம்மராவ் பிரதமராகவும், காங்கிரஸ் கட்சியின் தலைவராகவும் இருந்தார். 1996-ம் ஆண்டு நடந்த பாராளுமன்ற தேர்தலில் காங்கிரஸ் கட்சி தோல்வி அடைந்தபிறகு, கட்சியின் மூத்த தலைவர்களிடையே சோனியாகாந்தி அரசியலில் முழுமையாக ஈடுபட்டு, கட்சிக்கும் தலைவராக விளங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுத்தது.
இதனால், 1997-ம் ஆண்டு அவர் காங்கிரஸ் கட்சியின் அடிப்படை உறுப்பினரானார். பின்னர் 1998-ம் ஆண்டு அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவரானார். 2004-ம் ஆண்டு பாராளுமன்ற தேர்தலுக்கு இந்தியா முழுவதும் அவர் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டார். ‘ஆம் ஆத்மி’ (சாதாரண மக்கள்) என்ற கோஷத்தை எழுப்பினார். பா.ஜ.க. கட்சியினர் ‘இந்தியா ஷைனிங்’ (இந்தியா ஒளிர்கிறது) என்ற கோஷத்தை எழுப்பினார்கள். அப்போது காங்கிரஸ் கட்சியின் பிரதமர் வேட்பாளர் யார்? என்று சொல்லாமலேயே தேர்தலை சந்தித்து வெற்றியையும் பெற்றது. இதனால் அனைவரிடமும் சோனியாகாந்திதான் பிரதமராக வருவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.
ஆனால் அவரோ, ‘என்னுடைய மனசாட்சி, நான் பிரதமராக வரக்கூடாது என்று கூறுகிறது’ என்றார். இதனால் மன்மோகன்சிங்கை பிரதமராக தேர்வு செய்தார். ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு தலைவராக இருந்த சோனியா காந்தி, ‘நேஷனல் அட்வைசரி கவுன்சில்’ என்ற ஒரு புதிய அமைப்பை ஏற்படுத்தினார். அதற்கும் தலைவராக திகழ்ந்தார்.
இந்த அமைப்பில் தலைவராக இருப்பவர்கள் லாபம் சம்பாதிக்கும் தொழிலில் உள்ளனர் என்று 2006-ம் ஆண்டு குற்றச்சாட்டு எழுந்ததால், தன்னுடைய பதவியை உடனடியாக சோனியா காந்தி ராஜினாமா செய்தார். ஆனால், இரண்டுக்கும் அவர் தலைவராக இருந்த காலத்தில்தான், மகாத்மா காந்தியின் 100 நாள் வேலைவாய்ப்பு திட்டம், தகவல் அறியும் சட்டம் போன்ற திட்டங்களைக் கொண்டுவந்தார்.
போட்டியிட்ட எந்த பாராளுமன்ற தேர்தலிலும் தோல்வி அடைந்ததே இல்லை என்ற பெருமை சோனியா காந்திக்கு உண்டு. உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள ரேபரலி தொகுதியில்தான் தொடர்ந்து தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். 2009-ம் ஆண்டு நடைபெற்ற பாராளுமன்ற தேர்தலிலும் காங்கிரஸ் கட்சி தொடர்ந்து வெற்றியை பெற்றது. 1991-ம் ஆண்டுக்குப்பிறகு பாராளுமன்ற தேர்தலில் 200 இடத்துக்கும் மேல் வெற்றிபெற்ற ஒரே கட்சியாக காங்கிரஸ் உருவெடுத்து, கூட்டணி கட்சிகளின் ஆதரவோடு ஆட்சியை பிடித்தது. மேலும் சோனியாகாந்திக்கு உள்நாட்டிலும், வெளிநாட்டிலும் உள்ள பல்வேறு பல்கலைக்கழகங்கள் டாக்டர் பட்டம் கொடுத்து கவுரவித்துள்ளன. நீண்ட காலமாக காங்கிரஸ் கட்சியின் தலைவர் பதவியை அலங்கரிப்பவர் அவர்தான். தற்போது, உடல்நலக்குறைவின் காரணமாக கட்சிப்பணிகளில் இருந்து சிறிது ஓய்வெடுக்க விரும்புவதால், ராகுல்காந்தி அடுத்த தலைவராக உதயமாக இருக்கிறார்.
சோனியாகாந்தி தனது மாமியார் இந்திராகாந்தியை பற்றி, ‘இந்திராகாந்தியின் பொன்மொழிகள்’ என்ற தலைப்பில் புத்தகம் எழுதியுள்ளார். நேருவுக்கும், இந்திராகாந்திக்கும் இருந்த கடித தொடர்பை மையப்படுத்தி, ‘டூ அலோன் டூ டுகெதர்’ என்ற மற்றொரு புத்தகத்தையும் எழுதி இருக்கிறார்.
காங்கிரஸ் கட்சியில் ‘ஜனநாயகம்’ என்பதை மையப்படுத்தி கட்சியை வழிநடத்தியதுதான் அவரது தனிச்சிறப்பாக இருந்தது. இந்தியாவின் முதல் பெண் ஜனாதிபதி பிரதீபா பாட்டீலை ஜனாதிபதியாக, தேர்ந்தெடுத்ததில் சோனியாகாந்திக்கு முக்கிய பங்கு இருந்தது.
-முனைவர் பெர்னாட் து.சாமி, பேராசிரியர், சமூக ஆய்வு மையம், லயோலா கல்லூரி, சென்னை.