ஓகி புயலில் சிக்கி பலியான தமிழக மீனவர்களுக்கு அஞ்சலி

ஓகி புயலின் சிக்கி இறந்த மீனவர்களுக்கு தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது.

Update: 2017-12-08 22:03 GMT
புதுச்சேரி, 

தமிழகத்தின் குமரி மாவட்டத்தில் கடந்த 30-ந் தேதி ஓகி புயல் வீசியது. இந்த புயல் அறிவிப்பிற்கு முன்பாக மீன்பிடிக்கச் சென்ற மீனவர்கள் பலர் கடலில் சிக்கிக்கொண்டனர். அவர்களில் சிலர் கடல் அலையில் சிக்கி இறந்து விட்டனர். பலர் இன்னும் கரைக்கு திரும்ப வில்லை.

இந்தநிலையில் புதுவை மாநில விசைப்படகு உரிமையாளர் சங்கம் சார்பில் ஓகி புயலின் சிக்கி இறந்த மீனவர்களுக்கு தேங்காய்திட்டு மீன்பிடி துறைமுகத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. சங்க தலைவர் வடிவேலு தலைமை தாங்கினார். இதில் செயலாளர் கவி, பொருளாளர் செல்வம் உள்பட சங்க நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர். பலியானவர்களுக்கு அஞ்சலி செலுத்தும் விதமாக கடலில் பால் ஊற்றி, மலர் தூவினர். பின்னர் மெழுகுவர்த்தி ஏற்றி அஞ்சலி செலுத்தினர்.

அப்போது அவர்கள், புயலினால் காணாமல் போன மீனவர்களை மீட்க மத்திய, மாநில அரசு இணைந்து செயல்பட வேண்டும் என்று வலியுறுத்தினர். 

மேலும் செய்திகள்