இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 2 பேர் கைது
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரியில் இளம்பெண் கற்பழிப்பு வழக்கில் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.;
வண்டலூர்,
காஞ்சீபுரம் மாவட்டம் ஊரப்பாக்கம் அடுத்த காரணைப்புதுச்சேரியை சேர்ந்த 20 வயது பெண் கடந்த 4-ந்தேதி வீட்டில் இருந்தார். அப்போது இவரது வீட்டுக்குள் கூடுவாஞ்சேரி லட்சுமி நகர் பகுதியை சேர்ந்த ரஹ்மான் (வயது 22) அத்துமீறி நுழைந்து அந்த பெண்ணின் தாயாரை அடித்துள்ளார். பின்னர் அந்த இளம்பெண்ணை கத்தியை காட்டி மிரட்டி கற்பழித்து வீடியோ எடுத்துள்ளார். அப்போது அவருக்கு உடந்தையாக பாண்டூர் கிராமத்தை சேர்ந்த வினோத்குமார் (23) வீட்டுக்குள் இருந்ததாக கூறப்படுகிறது.
இது குறித்து பாதிக்கப்பட்ட அந்த பெண் கூடுவாஞ்சேரி போலீசில் புகார் செய்தார். போலீஸ் இன்ஸ்பெக்டர் கோவிந்தராஜ், பெண் சப்-இன்ஸ்பெக்டர் மகிதாஅன்னகிருஷ்டி வழக்குப்பதிவு செய்து ரஹ்மான் மற்றும் அவருக்கு உடந்தையாக இருந்த அவரது நண்பர் வினோத்குமார் ஆகியோரை கைது செய்து செங்கல்பட்டு மகளிர் கோர்ட்டில் ஆஜர்படுத்தினர். நீதிபதி இருவரையும் சிறையில் அடைக்க உத்தரவிட்டார்.