விவசாய கடனை தள்ளுபடி செய்யக் கோரி சிக்கமகளூருவில் ஜனதாதளம் (எஸ்) கட்சி ஆர்ப்பாட்டம் தேவேகவுடா பங்கேற்பு

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தொகுதி எம்.எல்.ஏ. (ஜனதாதளம் (எஸ்)) தத்தா தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக நடைபயணம் மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

Update: 2017-12-08 21:30 GMT

சிக்கமகளூரு,

சிக்கமகளூரு மாவட்டம் கடூர் தொகுதி எம்.எல்.ஏ. (ஜனதாதளம் (எஸ்)) தத்தா தனது தொகுதிக்கு உட்பட்ட கிராமங்களில் கடந்த ஒரு மாதமாக நடைபயணம் மேற்கொண்டு விவசாயிகளிடம் குறைகளை கேட்டறிந்தார்.

அப்போது விவசாயிகள் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தனர்.

இந்த நிலையில் நேற்று ஜனதாதளம் (எஸ்) கட்சி சார்பில் தேசிய மயமாக்கப்பட்ட வங்கிகளில் விவசாயிகள் வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய வேண்டும், நோய் தாக்குதலால் பாதிக்கப்பட்ட தென்னை மற்றும் பாக்கு விவசாயிகளுக்கு நஷ்டஈடு வழங்க வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி சிக்கமகளூரு மாவட்ட கலெக்டர் அலுவலகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடந்தது.

இந்த ஆர்ப்பாட்டத்திற்கு முன்னாள் பிரதமரும், ஜனதாதளம் (எஸ்) கட்சியின் தேசிய தலைவருமான தேவேகவுடா தலைமை தாங்கி கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினார். தத்தா எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். இதில் விவசாயிகளும், ஜனதாதளம்(எஸ்) கட்சி தொண்டர்களும் திரளாக கலந்துகொண்டனர். கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தின் போது அவர்கள் கோ‌ஷங்களை எழுப்பினர்.

பின்னர் தேவேகவுடா தலைமையில் கலெக்டர் ஸ்ரீரங்கையாவிடம் கோரிக்கை மனு அளிக்கப்பட்டது. அதைதொடர்ந்து அனைவரும் கலைந்து சென்றனர். முன்னதாக தத்தா எம்.எல்.ஏ. தலைமையில் விவசாயிகளும், அக்கட்சியின் தொண்டர்களும் கடூரில் இருந்து நடைபயணமாக சிக்கமகளூரு கலெக்டர் அலுவலகத்துக்கு வந்தனர்.

மேலும் செய்திகள்