‘தினத்தந்தி’ செய்தி எதிரொலி ஆலந்தூரில் ஆபத்தான மின்சார கேபிள்கள் பூமிக்கடியில் புதைப்பு

ஆலந்தூரில் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் பள்ளம் தோண்டி பூமிக்கடியில் புதைக்கப்பட்டது.

Update: 2017-12-08 23:45 GMT
ஆலந்தூர், 

சென்னையை அடுத்த ஆலந்தூர் புதுப்பேட்டை தெருவில் உயர் அழுத்த மின்சார கேபிள்கள் பூமிக்கடியில் புதைக்கப்படாமல் சாலையோரம் உள்ள நடைபாதை மீது செல்லும் வகையில் இருந்தது. அந்த மின்சார கேபிள்கள் பழுதடைந்து அதன் மீது பிளாஸ்திரிகளால் ஒட்டு போடப்பட்டும் இருந்தது. அருகில் மழலையர் பள்ளிக்கூடமும் இயங்கி வருவதால் விபரீதம் ஏற்படுவதற்கு முன்பாக ஆபத்தான மின்சார கேபிள்களை சீரமைக்க வேண்டும் என 6-ந்தேதி ‘தினத்தந்தி’யில் படத்துடன் செய்தி வெளியாகி இருந்தது.

இதையடுத்து ஆலந்தூர் மின்சார வாரிய ஊழியர்கள் உடனடியாக நடைபாதை மீது சென்ற உயர் அழுத்த மின்சார கேபிள்களை பள்ளம் தோண்டி பூமிக்கடியில் புதைத்தனர்.

இதனால் மகிழ்ச்சி அடைந்த அந்த பகுதி பொதுமக்கள், “பிளாஸ்திரிகள் ஒட்டப்பட்ட கேபிள்களுக்கு பதிலாக புதிய மின்சார கேபிள்கள் அமைக்க மின்வாரிய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும்” என கோரிக்கை விடுத்தனர். 

மேலும் செய்திகள்