திருவொற்றியூரில் டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு கூட்டம்

டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் திருவொற்றியூரில் நடந்தது.

Update: 2017-12-08 22:30 GMT
திருவொற்றியூர், 

திருவொற்றியூரில் டெங்கு கொசு உற்பத்தியை தடுக்க மண்டல உதவி ஆணையர் அனிதா தலைமையில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. அதன் ஒரு பகுதியாக வடசென்னை இருசக்கர வாகன பழுதுபார்ப்போர் சங்க நிர்வாகிகள் கலந்து கொண்ட டெங்கு கொசு ஒழிப்பு விழிப்புணர்வு ஆலோசனை கூட்டம் திருவொற்றியூரில் நடந்தது.

இதில் கலந்துகொண்ட சுகாதார துறை அதிகாரிகள், கழற்றி வைக்கப்பட்டு உள்ள பழைய டயர்கள் மற்றும் இருசக்கர வாகன உதிரி பாகங்களில் தேங்கி நிற்கும் தண்ணீரில் டெங்கு கொசுக்கள் எப்படி உற்பத்தி ஆகின்றது? என்பதை படம் மூலம் விளக்கி கூறி, டெங்கு கொசு உற்பத்தியை தடுக்கும் வகையில் டயர்கள், வாகன உதிரி பாகங்களில் தண்ணீர் தேங்க விடாமல் பார்த்துக்கொள்ளும்படி இருசக்கர வாகன பழுது பார்ப்போர் சங்க நிர்வாகிகளிடம் வலியுறுத்தினர். 

மேலும் செய்திகள்