ரசாயன ஆலையில் தொழிலாளி ‘திடீர்’ சாவு பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் ரசாயன ஆலையில் வேலை பார்த்தவர் திடீரென இறந்தார். அவர் விஷ வாயு தாக்கி இறந்ததாக கூறி அந்த பகுதியை சேர்ந்த பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
ஈரோடு,
ஈரோடு கருங்கல்பாளையம் கே.எஸ். நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து (வயது 45). இவர் அதே பகுதியில் உள்ள லட்சுமி ரசாயன ஆலையில் தொழிலாளியாக வேலை செய்து வந்தார்.
இந்த நிலையில் நேற்று காலை வழக்கம்போல் முத்து வேலைக்கு சென்றார். அப்போது அவர் திடீரென மயங்கி விழுந்து எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்துள்ளார். இதை அறிந்த அந்த பகுதியை சேர்ந்த இளைஞர்கள் ஓடிவந்து அவரை மீட்டு சிகிச்சைக்காக மோட்டார் சைக்கிளில் வைத்து அருகில் உள்ள ஒரு தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர்.
அங்கு அவரை பரிசோதனை செய்த டாக்டர்கள் ஏற்கனவே முத்து இறந்து விட்டதாக தெரிவித்தனர். இதை கேட்டு அதிர்ச்சி அடைந்த இளைஞர்கள் மற்றும் பொதுமக்கள் 50-க்கும் மேற்பட்டோர் அந்த ஆலைக்கு ஆவேசமாக சென்றனர். பின்னர் அவர்கள் அங்கு நின்று கொண்டிருந்த 2 லாரி மற்றும் ஒரு கார் கண்ணாடிகளை அடித்துநொறுக்கினர். மேலும் ஆலையின் அலுவலகத்தையும் அடித்து உடைத்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் கருங்கல்பாளையம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள். அப்போது போலீசாரிடம் அவர்கள் கூறும்போது, ‘நாங்கள் ஆலைக்குள் சென்று பார்த்தபோது முத்து எந்தவித அசைவும் இல்லாமல் கிடந்தார். அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்கு கூட கொண்டு செல்லவில்லை. நாங்கள் தான் மருத்துவமனைக்கு கொண்டு சென்றோம். முத்து விஷ வாயு தாக்கி தான் இறந்துள்ளார். எனவே அவரது உயிரிழப்புக்கு காரணமான இந்த ஆலையை உடனடியாக இழுத்து மூட வேண்டும்’ என்றனர்.
அதற்கு ஆலையில் இருந்தவர்கள், ‘இன்று (நேற்று) ஆலையில் எந்த ஒரு எந்திரமும் இயங்காததால் அவர் விஷவாயு தாக்கி இறக்கவில்லை. மாரடைப்பால் இறந்துள்ளார்’ என்று கூறினர். இதனால் ஆத்திரம் அடைந்த பொதுமக்கள் ஆலையின் முன்பு அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.
அப்போது போலீசார் பொதுமக்களிடம், “முத்துவின் உடலை பிரேத பரிசோதனை செய்து பார்த்தால் அவர் விஷ வாயு தாக்கி இறந்தாரா? அல்லது மாரடைப்பால் இறந்தாரா? என்பது பற்றி தெரியவரும். அதன் பிறகு உரிய விசாரணை நடத்தப்படும். எனவே நீங்கள் இங்கிருந்து கலைந்து செல்லுங்கள்’ என்றனர்.
அதை ஏற்றுக்கொண்ட பொதுமக்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர். இந்த சம்பவத்தால் கருங்கல்பாளையம் பகுதியில் நேற்று பெரும் பரபரப்பு ஏற்பட்டது.