தண்டவாளத்தில் காட்டு யானைகள் நிற்பதை அறிய ‘சென்சார்’ கருவி
கோவை மதுக்கரை வனப்பகுதி வழியாக செல்லும் தண்ட வாளத்தில் காட்டு யானைகள் நிற்பதை அறிய ‘சென்சார்‘ கருவி அமைக்கப்பட்டு உள்ளது.
கோவை,
கோவை மாவட்டத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதி காட்டு யானைகள் வசிக்க ஏற்ற இடமாக இருக்கிறது. இங்கு 400-க்கும் மேற்பட்ட காட்டு யானைகள் உள்ளன. இதுதவிர கேரள மாநிலத்தில் இருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகளுக்கு கோவை மாவட்ட வனப்பகுதி வலசைபாதையாக (வழிப்பாதை) உள்ளது. இதனால் அங்கிருந்து இடம் பெயர்ந்து செல்லும் காட்டு யானைகள் மலையடிவார பகுதியில் இருக்கும் கிராமங்களுக்குள் புகுந்து அட்டகாசம் செய்கின்றன.
கேரள மாநிலம் பாலக்காடு, வாளையாறு மற்றும் அதைச்சுற்றி உள்ள பகுதியில் இருந்து கோவைக்கு வரும் காட்டு யானைகள் மதுக்கரை வனப்பகுதி வழியாகதான் செல்கின்றன. இந்த வனப் பகுதியில் மதுக்கரையில் இருந்து பாலக்காட்டுக்கும் (தண்ட வாளம்-ஏ), பாலக்காட்டில் இருந்து மதுக்கரைக்கும் (தண்ட வாளம்-பி) என 2 தண்டவாளங்கள் செல்கின்றன.
இதில் நவக்கரை பிரிவு சோலக்கரை வனப்பகுதியில் தரையில் இருந்து தண்டவாளம் 7 அடிக்கும் மேல் உயரமாக இருப்பதால் இந்த வழியாக காட்டு யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்ல சிரமம் ஏற்பட்டது. அவ்வாறு கடந்து செல்லும்போது ரெயிலில் அடிபட்டு காட்டு யானைகள் இறந்தன. இதையடுத்து, காட்டு யானைகள் ரெயிலில் அடிபடுவதை தடுக்க, வனத்துறையினர் மற்றும் ரெயில்வே நிர்வாக அதிகாரிகள் இணைந்து ஆலோசனை நடத்தினார்கள்.
எந்தப்பகுதியில் காட்டு யானைகள் அதிகளவில் தண்டவாளத்தை கடக்கின்றன என்பதை கண்டறிந்து, அங்கு தண்டவாளத்தை காட்டு யானைகள் எளிதில் கடந்து செல்ல பாதை அமைக்கப்பட்டு உள்ளது. தற்போது அதன் வழியாக காட்டு யானைகள் எளிதாக தண்டவாளத்தை கடந்து செல்கின்றன. இது தவிர தண்டவாளத்தின் அருகில் காட்டு யானைகள் வந்துவிட்டால், அதை கண்டறியும் வசதிகளும் செய்யப்பட்டு உள்ளன.
இது குறித்து கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம் கூறியதாவது:-
மதுக்கரை வனப்பகுதி வழியாக 2 தண்டவாளங்கள் அமைக்கப்பட்டு உள்ளன. இதில் மதுக்கரையில் இருந்து பாலக்காடு செல்லும் ‘ஏ’ தண்டவாளத்தில் 1½ கி.மீ. தூரமும், பாலக்காட்டில் இருந்து மதுக்கரைக்கு செல்லும் ‘பி’ தண்டவாளத்தில் 3 கி.மீ. தூரம் என 4½ கி.மீ. தூரம் வனப்பகுதி வழியாக செல்கிறது. இந்த தண்டவாள பகுதியில் காட்டு யானைகள் அடிபடுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
இதற்காக தண்டவாளத்தை யானைகள் எளிதாக கடந்து செல்ல இருபுறத்திலும் மண் அமைத்து பாதைவசதி செய்யப்பட்டு உள்ளது. அந்த வழியாக யானைகள் சென்று தண்டவாளத்தை எளிதாக கடந்து செல்கிறது. அத்துடன் தண்டவாளம் அருகே யானைகள் நிற்பதை கண்டறிய சோலக்கரை அருகில் உள்ள ஒரு வளைவில் கண்காணிப்பு கோபுரம் அமைக்கப்பட்டு அங்கு கேமராக்களும் பொருத்தப்பட்டு உள்ளன.
இதுதவிர அங்கு தண்டவாளத்தின் இருபுறத்திலும் ‘சென்சார் கருவி’யும், அலாரமும் பொருத்தப்பட்டு உள்ளது. இந்த கருவி மூலம் தண்டவாளத்தில் இருந்து இருபுறமும் 250 மீட்டர் தூரம் வரை 6 அடி உயரத்துக்கு ஒரு நுண் அலையும், 7 அடி உயரத்துக்கு மற்றொரு நுண் அலையும் செல்லும். இதனால் அதன் அருகே காட்டு யானைகள் சென்றால் உடனடியாக அந்த கருவியில் பொருத்தப்பட்டு உள்ள அலாரம் ஒலிக்கும். அதோடு வனத்துறையினருக்கும், பாலக்காடு ரெயில்வே அதிகாரிகளின் செல்போனுக்கு குறுஞ்செய்தி (எஸ்.எம்.எஸ்.) சென்றுவிடும்.
உடனே அவர்கள் ரெயில் என்ஜின் டிரைவருக்கு தண்டவாளத்தின் அருகே காட்டு யானைகள் நிற்கிறது, மெதுவாக செல்வதுடன், ஒலி எழுப்பியபடி செல்லுங்கள் என்று அறிவுரை வழங்குவார்கள். அத்துடன் வனத்துறையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று, தண்டவாளத்தின் ஓரத்தில் நிற்கும் காட்டு யானைகளை துரத்தி விடுவார்கள். இதனால் விபத்துகள் ஏற்பட வாய்ப்பு இல்லை.
தற்போது சோதனை அடிப்படையில் ஒரு இடத்தில் மட்டும் இந்த ‘சென்சார்‘ கருவி வைக்கப்பட்டு உள்ளது. இது வெற்றியடைந்து விட்டால் வனப்பகுதி வழியாக செல்லும் 4½ கி.மீ. தூரத்திலும் காட்டு யானைகள் அடிக்கடி தண்டவாளத்தை கடக்கும் பகுதியில் சென்சார் கருவிகள் அமைக்கப்படும். அத்து டன் காட்டு யானைகளை கண்காணிக்க இந்தப்பகுதியில் மொத்தம் 18 கண்காணிப்பு கேமராக்கள் அமைக்கப்பட்டு, கண்காணிக்கப்படுகின்றன.
நமது நாட்டிலேயே முதல் முறையாக மதுக்கரை வனப்பகுதியில் தான் காட்டு யானைகள் தண்டவாளத்தை கடந்து செல்ல பாதை வசதி ஏற்படுத்தி கொடுக்கப்பட்டு உள்ளது. மேலும் ஒருசில இடங் களில் பாதை வசதி செய்யும் பணி நடந்து வருகிறது. இதை கோவையில் செயல்பட்டு வரும் வன அதிகாரிகளுக்கான பயிற்சி கல்லூரியில் பயிற்சி பெற வந்த குஜராத் மாநிலத்தை சேர்ந்தவர்கள் இந்த வசதியை பார்வையிட்டு ஆச்சரியம் அடைந்தனர்.
அவர்கள் எங்கள் பகுதியில் அடிக்கடி காட்டு யானைகள் மற்றும் சிங்கங்கள் தண்டவாளத்தை கடக்கும்போது, ரெயிலில் அடிபடுகின்றன. எனவே எங்கள் பகுதியிலும் இதுபோன்று செய்கிறோம் என்று கூறினார்கள். இந்த பகுதியில் காட்டு யானைகள் ரெயிலில் அடிபடுவதை தடுக்க வனத்துறையினர் 24 மணி நேரமும் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டு வருகிறார்கள்.
இவ்வாறு அவர் கூறினார்.
இதற்கிடையே, கோவை வந்த கூடுதல் முதன்மை தலைமை வனப்பாதுகாவலர் துரைராசு சோலக் கரையில் தண்டவாளம் அருகே ‘சென்சார்‘ கருவி அமைக்கப்பட்டு உள்ள இடத்துக்கு சென்று அங்கு செய்யப்பட்டு உள்ள பணிகளை ஆய்வு செய்தார். பின்னர் அவர், யானைகளை பாதுகாக்க தேவைப் படும் அனைத்து வசதிகளையும் செய்ய வனத்துறையினருக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின்போது கோவை மண்டல வனப்பாதுகாவலர் ராமசுப்பிரமணியம், மாவட்ட வன அதிகாரி சதீஷ், மதுக்கரை வனச்சரக அதிகாரி செந்தில்குமார், இயற்கை பாதுகாப்பு சங்க தலைவர் ஜலாலுதீன் மற்றும் வனத்துறையினர் உடன் இருந்தனர்.