காட்டு யானைகளை விரட்ட 2-வது நாளாக கும்கிகளுடன் தீவிர தேடுதல் வேட்டை
மலைக்கிராமங்களில் அட்டகாசம் செய்யும் காட்டுயானைகளை விரட்ட 2-வது நாளாக கும்கியானைகளுடன் வனத்துறையினர் தீவிர தேடுதல் வேட்டை நடத்தி வருகின்றனர்.
ஆனைமலை,
பொள்ளாச்சி வனச்சரகத்தையொட்டி சேத்து மடை, சர்க்கார்பதி, செமனாம்பதி, சரளைப்பதி, தம்மம்பதி, சின்னாறுபதி உள்பட பல்வேறு மலைக்கிராமங்கள் உள்ளன. இங்குள்ள பட்டா நிலங்களில் தென்னை, வாழை, காய்கறிகள், மக்காச்சோளம் அதிகளவில் சாகுபடி செய்யப்பட்டுள்ளது. இந்தநிலையில் இந்த பகுதியில் பயிரிடப்பட்ட பயிர்களை தேடி அடிக்கடி வனவிலங்குகள் வந்து செல்வது வாடிக்கையாக உள்ளது.
சமீபத்தில் சேத்து மடை பகுதியில் ஊருக்குள் புகுந்த ஆண் யானை ஒன்று, சோளக்காட்டில் காவலுக்கு இருந்த விவசாயி வேலுச்சாமி என்பவரை விரட்டியதால் தப்பி ஓட முயன்று தவறி விழுந்து பரிதாபமாக இறந்தார். இது தவிர தென்னை மரங்களையும் சேதப்படுத்தி வருகிறது. இந்த சம்பவங்கள் அந்த பகுதியில் தொடர்ந்து வருகிறது. விவசாய நிலங்களுக்குள் வனவிலங்குகள் வருவதை தடுக்கும் வகையில் வனத்துறைசார்பில் அகழி வெட்டப்பட்டுள்ள போதும் வனவிலங்குகள் நடமாட்டம் அதிகரித்துள்ளதால் விவசாயிகள் பீதி அடைந்துள்ளனர்.
இருப்பினும் யானை, காட்டுப்பன்றி உள்ளிட்ட ஏராளமான வன விலங்குகள் விளை நிலங்களுக்குள் புகுவது பயிர்களை சேதப்படுத்துவது என்பது, அன்றாட நிகழ்ச்சியாகமாறி உள்ளது. இந்த நிலையில் விளை நிலங்களுக்குள் வருகின்ற காட்டுயானைகளை தடுக்க பொள்ளாச்சி வனச்சரகர்காசிலிங்கம் தலைமையில் சிறப்புரோந்து குழு அமைக்கப்பட்டுள்ளது. இந்த ரோந்து குழுவினர் சில குழுக்களாகப் பிரிந்து 24 மணி நேரமும் கண்காணிப்புப்பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.
இருந்தபோதிலும் அந்த பகுதியில் காட்டுயானைக்கூட்டம் சுற்றி அட்டகாசம் செய்து வருகிறது.போத்தமடை சுற்று வட்டார பகுதியில் காட்டுயானைகளால் தென்னை மரங்களை சேதப்படுத்தியதால் வனச்சரகர் காசிலிங்கம், வனவர் மணிகண்டன், வனத்துறையினர் மற்றும் வேட்டைத் தடுப்புக்காவலர்கள்கொண்ட குழுவினர் செமனாம்பதிபகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
இந்த நிலையில் காட்டுயானைகள் நடமாட்டம் உள்ளதா? என்பதை அறியவும், அவ்வாறு இருந்தால் அவற்றை விரட்டவும், டாப்சிலிப்பிலிருந்து 4 கும்கி யானைகளை வனத்துறையினர் வரவழைத்துள்ளனர். வனத்துறையினர் நேற்று 2-வது நாளாக தேக்குமடை, சரளைபதி, செமனாம்பதி ஆகிய இடங்களில் கும்கி யானைகளுடன் தீவிர தேடுதல் வேட்டையில் ஈடுபட்டுள்ளனர். இது குறித்து வனச்சரகர் காசிலிங்கம் கூறியதாவது:-
டாப்சிலிப் முகாமிலிருந்து கலீம்,சுயம்பு, வெங்கடேஷ், மாரியப்பன் ஆகிய கும்கி யானைகளை தொடர்ந்து தேடுதல் வேட்டையில் பயன்படுத்தி வருகின்றோம். இரவு, பகலாக இந்த பணி நடந்து வருகிறது. ஆனால் காட்டுயானைகள் நடமாட்டம் ஏதும் இல்லாமல் உள்ளது. இருந்த போதிலும் தொடர்ந்து 10 நாட்கள் கும்கி யானைகள் இங்கு முகாமிட்டு இருக்கும்.
இவ்வாறு அவர் கூறினார்.