நிவாரண தொகை வழங்க கோரி மீன்வளத்துறை அலுவலகம் முற்றுகை

மரக்காணத்தில் நிவாரண தொகை வழங்க கோரி மீன் வளத்துறை அலுவலகத்தை மீனவர்கள் முற்றுகையிட்டுfa போராட்டம் நடத்தினர்.

Update: 2017-12-07 23:41 GMT

மரக்காணம்,

மரக்காணம் பகுதியில் அழகன்குப்பம், வசவன்குப்பம், கைப்பாணிகுப்பம், எக்கியர்குப்பம் அனுமந்தைகுப்பம், அனிச்சங்குப்பம் உள்பட 19 மீனவர் கிராமங்கள் உள்ளன. இந்த கிராமங்களை சேர்ந்த மீனவர்கள் கட்டு மரம், பைபர் படகு போன்றவற்றை பயன்படுத்தி தினமும் கடலுக்கு சென்று மீன்பிடி தொழில் செய்து வருகின்றனர்.

இந்தநிலையில் ஒகி புயல் காரணமாக ஒரு வாரத்துக்கும் மேலாக மீனவர்கள் மீன்பிடிக்க கடலுக்குச் செல்லவில்லை. தற்போது கன மழை மற்றும் பலத்த காற்று வீசக்கூடும். எனவே மீனவர்கள் கடலுக்கு செல்லவேண்டாம் என்று மீன் வளத்துறை அறிவுறுத்தியது. இதனால் மீனவர்கள் கடலுக்குச் செல்லவில்லை.

இந்தநிலையில் புயல், மழையால் வாழ்வாதாரம் பாதிக்கப்பட்டுள்ள விழுப்புரம் மாவட்ட மீனவர்களுக்கு நிவாரண தொகையாக தலா ரூ.10 ஆயிரம், கன்னியாகுமரி மாவட்டத்தில் உயிரிந்த மீனவர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.10 லட்சம் வழங்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும் என்று வலியுறுத்தி மரக்காணத்தில் உள்ள மீன் வளத்துறை அலுவலகத்தை நேற்று நூற்றுக்கும் மேற்பட்ட மீனவர்கள் முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் கோரிக்கைகளை மீன்வளத்துறை அதிகாரியிடம் மனுவாக கொடுத்தனர்.

மேலும் செய்திகள்