வைகை ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் தண்ணீர் நிரப்பப்படுகிறது
வைகை ஆற்றில் இருந்து ராட்சத குழாய்கள் மூலம் வரலாற்று பெருமைமிக்க மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரப்பப்படுகிறது.
மதுரை,
மதுரை மாநகரின் மையப் பகுதியில் அமைந்துள்ள சரித்திர புகழ்மிக்க மீனாட்சி அம்மன் கோவிலில் இருந்து சுமார் 4 கிலோ மீட்டர் தூரத்தில், மாரியம்மன் தெப்பக் குளம் அமைந்துள்ளது. தெப்பக்குளத்தின் சுற்றுப்பகுதி முழுவதும் கற்களாலேயே தடுப்புச்சுவர் அமைக்கப்பட்டிருக்கிறது. பிரமாண்டமாக, விசாலமாக காட்சி அளிக்கும் மாரியம்மன் தெப்பக்குளம் ஆயிரம் அடி நீளமும், 950 அடிக்கு மேல் அகலமும் கொண்டது. தெப்பக்குளத்தில் முழுமையாக தண்ணீர் நிறைந்தால் கடல் போல் காட்சியளிக்கும். அதைக்காண கண்கோடி வேண்டும்.
குளத்திற்கு செல்ல நான்கு பக்கமும் நீண்ட படிக்கட்டுகள் உள்ளன. குளத்தின் மையப்பகுதியில் உள்ள மையமண்டபமும் சிறப்புற அமைந்துள்ளது. அந்த மண்டபத்தின் நடுவே நீராவி மண்டப கோவிலும், அதை சுற்றி பச்சைப் பசேலென்ற மரங்களும், பூச்செடிகளும் நந்தவனமாக உருவெடுக்கப்பட்டிருந்தது. நான்கு மூலைகளிலும் அழகிய சிறிய மண்டபங்கள் இடம் பெற்றுள்ளன. இவை சிற்பக்கலையுடன் மெருகூட்டப்பட்டிருக்கின்றன. ஒருகாலத்தில் தெப்பக்குளம் முழுவதும் தண்ணீர் நிரம்பி இருந்தபோது நீச்சல் தெரிந்தவர்கள் நீந்திச் சென்று அங்குள்ள சாமியை வழிபட்டு வந்ததாக கூறப்படுகிறது.
மதுரையை ஆண்ட மன்னர் திருமலை நாயக்கரின் கலைநயத்தால் உருவாக்கப்பட்ட அரண்மனையான மகால் காண்போரை வியக்க வைக்கிறது. திருமலை நாயக்கர் மகாலில் உள்ள வானுயர்ந்த பிரமாண்டமான தூண்கள் வரலாற்றில் நீங்கா இடம் பெற்றுள்ளன. இந்த அரண்மனை உருவெடுப்பதற்கு பெரும்பங்காக அமைந்தது மாரியம்மன் தெப்பக்குளம் அமைந்துள்ள இடம் என்றால் மிகையாகாது. மகாலின் கட்டுமான பணிக்காக இங்குதான் மண் எடுத்து செங்கல்கள் தயாரித்து கொண்டு வந்ததாக புராணங்கள் கூறுகின்றன. இந்த தெப்பக்குளத்திற்கு திருமலை நாயக்கர் சமுத்திரம் என்ற புகழ் பெயரும் உண்டு.
மகாலுக்காக அந்த இடத்தில் (தெப்பக்குளத்தில்) மண் தோண்டிய போது ஒரு அதிசயம் அரங்கேறியது. அந்த அதிசயத்தை இன்றைக்கும் வரலாற்று சிறப்புமிக்க மீனாட்சி அம்மன் கோவிலில் உள்ள சுந்தரேசுவரர் சன்னதி பிரகாரத்தில் காணலாம். ஆம் அங்கே பக்தர்களுக்கு அருள்பாலிக்கும் முக்குறுணி பிள்ளையார் சிலைதான் அந்த அதிசயம். தெப்பக்குளத்தை தோண்டியபோது அற்புதமான இந்த முக்குறுணி பிள்ளையார் சிலை அங்கு கிடைத்தது தான்.
ஆண்டுதோறும் மீனாட்சி அம்மன் கோவிலில் தை மாதம்தோறும் தெப்பத்திருவிழா 12 நாட்கள் நடைபெறுவது வழக்கம். திருவிழாவின் கடைசி நாளில் மாரியம்மன் தெப்பக்குளத்தில் தண்ணீர் நிரம்பி இருக்கும்போது மீனாட்சி அம்மன், சுந்தரேசுவரர்- பிரியாவிடையுடன் அங்கு சென்று, பல வண்ண மலர்கள், மின்விளக்குகளால் அலங்கரிக்கப்பட்ட தெப்பத்தில் எழுந்தருள்வார்கள். காலையிலும், இரவிலும் பக்தர்கள் வடம்பிடிக்க தெப்பக்குளத்தில் வலம் வருவார்கள்.
தெப்பக்குளத்தின் வடக்குப்பகுதியில் ரோட்டையொட்டி பிரசித்திபெற்ற மாரியம்மன் கோவில் அமைந்துள்ளது. கோவிலுக்கு ஆயிரக்கணக்கானபக்தர்கள் வந்து செல்கிறார்கள். பல்வேறு நிகழ்வுகளுக்காக நேர்த்திக்கடன் செலுத்துவோரின் எண்ணிக்கையும் அதிகம். விடுமுறை நாட்களில் பக்தியுடன், மதுரை மக்களின் பொழுதுபோக்கு இடமாகவும் மாரியம்மன் தெப்பக்குளம் பகுதி இன்றைக்கு உருவெடுத்துள்ளது. உள்ளூர் மக்கள் மட்டும் அல்லாமல் வெளிநாட்டு பயணிகள், மாநிலத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் வரும் சுற்றுலா பயணிகள் கண்டு ரசிக்க கூடிய இடங்களில் இந்த தெப்பக்குளமும் ஒன்றாகும்.
தெப்பக்குளத்தில் தண்ணீர்நிறைந்தால் கோவில் சார்பில் படகுகள் விடப்பட்டு, சுற்றுலாபயணிகள், பக்தர்கள் படகு சவாரி செய்வதும் உண்டு. படகில் மைய மண்டபம் சென்று, அங்கு சாமி தரிசனம் செய்வார்கள். அந்தக் காலத்தில் மதுரை நகருக்கு வெளியில் இருந்த மாரியம்மன் தெப்பக்குளம் இப்போது பரந்து விரிந்த மாநகரின் ஒரு பகுதியாக ஒன்றிணைந்து விட்டது. காலம் மாற, மாற சிறப்புமிக்க தெப்பக்குளத்தின் பொலிவும் மாறத்தொடங்கின.
பருவ மழை பெய்து வைகை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டால் தான் மாரியம்மன் தெப்பக்குளத்திற்கு தண்ணீர் வரும் என்ற நிலை ஏற்பட்டு போனது. பி.டி.ஆர். பாலம் அருகே வைகை ஆற்றில் இருந்து மோட்டார் மூலம் பம்ப் செய்து குழாய் வழியாக தண்ணீர் நிரப்பப்படும். அப்போதுதான் குளத்தில் தண்ணீர் நிறைந்திருக்கும்.
மழை பொய்த்து, வைகைஆறு வறண்டு விட்டால். தெப்பக்குளத்தின் காட்சியும் மாறிவிடும். தண்ணீர் இல்லாமல் வறண்டு திறந்தவெளி மைதானம்போல் உருவெடுக்கும். அந்த காலகட்டத்தில் சிறுவர்கள், இளைஞர்களுக்கு உற்சாகம் தான். ஏனென்றால் விடுமுறை நாட்களில் தெப்பக்குளம் விளையாட்டு மைதானமாக மாறி விடும். கிரிக்கெட் விளையாட்டு களைகட்டும். அதே சமயம் கூட்டம் அதிகம் இல்லாத நேரங்களில் சமூக விரோதிகளின் கூடாரமாகவும் சில நேரங்களில் மாறுவதுண்டு.
இந்தநிலையில் வரலாற்று சிறப்புமிக்க, மதுரையின் பெருமையை பறை சாற்றும் வகையில் பழமையும், தொன்மையும்வாய்ந்த மாரியம்மன் தெப்பக்குளம் தற்போது தண்ணீர் இன்றி காய்ந்துகிடக்கும் அவலநிலை தொடந்தது. மணலூரில் இருந்து குழாய் மூலம் தண்ணீர்கொண்டு வந்து குளத்தில் நிரப்பவும் திட்டமிடப்பட்டது. ஆனால் அதுவும் கனவு திட்டமாகி போனது
இந்தநிலையில் வைகைஅணையில் இருந்து ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களுக்கு பாசனம் மற்றும் குடிநீர்தேவைக்காக வைகைஅணையில் தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது. அதனால் மதுரை வைகைஆற்றின் இருகரைகளையும் தொட்டுதண்ணீர் பெருக்கெடுத்து ஓடுகிறது. அதனால் வைகைஆற்றில் இருந்து மின் மோட்டார் மூலம் ராட்சத குழாய்களில் தண்ணீர்கொண்டு வரப்பட்டு தெப்பக்குளத்தில் நிரப்பப்பட்டு வருகிறது. அதனால் சிலநாட்களில் குளம்நிரம்பிதண்ணீர் நிறைந்துகாட்சிஅளிக்கும். இந்தஆண்டு தெப்பத்திருவிழா கோலாகலமாக அமைந்திடும் என பக்தர்கள் மனம் மகிழ்ந்துள்ளனர்.