6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம்
6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி சேடபட்டி, வாடிப்பட்டி பகுதிகளில் அங்கன்வாடி பணியாளர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.
உசிலம்பட்டி,
சேடபட்டி ஒன்றியத்தில் பணிபுரியும் அங்கன்வாடி பணியாளர்கள் தங்களின் 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் செய்தனர். இதில் அங்கன்வாடி பணியாளர் மற்றும் உதவியாளர்களுக்கு காலமுறை ஊதியம் வழங்க வேண்டும். ஊதியக்குழு நிலுவைத்தொகையை வழங்கிட வேண்டும், சேடபட்டி ஒன்றியத்தில் காலிப் பணியிடங்களை உடனே நிரப்ப வேண்டும், மே மாதம் கோடை விடுமுறை வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட 6 அம்சகோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோஷங்கள் எழுப்பினர்.
வாடிப்பட்டி பொன்பெருமாள்மலையடிவாரத்தில் உள்ள ஒருங்கிணைந்த ஊட்டசத்து மைய அலுவலகத்தில் வாடிப்பட்டி வட்டார அங்கன்வாடி ஊழியர் மற்றும் உதவியாளர் சங்கம் சார்பில் அங்கன்வாடி ஊழியர்களுக்கு இளநிலை உதவியாளர் ஊதியமும், உதவியாளர்களுக்கு அலுவலக உதவியாளர் ஊதியமும், முறையான ஓய்வூதியம், அங்கன்வாடிமையங்களை தனியாரிடம் கொடுப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தும் ஆர்ப்பாட்டம் நடந்தது.
வட்டார தலைவர் ஆறுமுகம் தலைமை தாங்கினார். துணைத் தலைவர் கவிதா முன்னிலை வகித்தார். செயலாளர் நாகலட்சுமி வரவேற்றார். ஆர்ப்பாட்டத்தை மாவட்ட தலைவர் பாண்டியம்மாள் தொடங்கி வைத்தார். முடிவில் வட்டார பொருளாளர் அம்சலட்சுமி நன்றி கூறினார்.
இதேபோல மாற்றுத் திறனாளிகளின் உரிமைகளைப் பாதுகாக்க கோரி உசிலம்பட்டியில் உள்ள முருகன் கோவில் அருகில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாவட்ட தலைவர் நாகலட்சுமி தலைமை தாங்கினார். முன்னாள் எம்.எல்.ஏ. அண்ணாத்துரை கண்டன உரை ஆற்றினார். இதில் ஊனமுள்ள வேலையில்லாத மாற்றுத் திறனாளிகளுக்கு மாதாந்திர உதவித்தொகை வழங்க வேண்டும், ஆசிரியர் அரசு ஊழியர் பணி நியமனத்தில் மாற்றுத்திறனாளிகளுக்குரிய அரசாணைகளை அமல்படுத்த வேண்டும் என்பது உள்பட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் கோஷங்கள் எழுப்பினர். இதில் வாடிப்பட்டி, அலங்காநல்லூர், உசிலம்பட்டி, டி.கல்லுப்பட்டி, சேடபட்டி, மேலூர், செல்லம்பட்டி, அவனியாபுரம் ஆகிய பகுதியிலிருந்து ஏராளமானோர் கலந்து கொண்டனர்.
பேரையூர் அங்கன்வாடி அலுவலகம் முன்பு அங்கன்வாடி ஊழியர்கள் கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். அங்கன்வாடி ஊழியர்களை முழுநேர ஊழியராக ஆக்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. அனைத்து அங்கன்வாடி ஊழியர் சங்க டி.கல்லுப்பட்டி வட்டாரத் தலைவர் ஹேமலதா, செயலாளர் ராஜேஸ்வரி ஆகியோர் கோரிக்கைகளை வலியுறுத்தி பேசினர்.