சாராய வியாபாரி, குண்டர் சட்டத்தில் கைது
சாராய வியாபாரி, குண்டர் சட்டத்தில் கைது
சேலம்,
எடப்பாடி அருகே உள்ள பனங்காடு செட்டிமாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் அண்ணாதுரை (வயது 51). பிரபல சாராய வியாபாரியான அவரை இரும்பாலை மதுவிலக்கு பிரிவு போலீசார் கைது செய்து சேலம் மத்திய சிறையில் அடைத்தனர். ஏற்கனவே இவர் மீது சாராயம் விற்றதாக பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சாராயம் காய்ச்சி விற்பனை செய்தல் உள்ளிட்ட குற்றச்செயல்களில் தொடர்ந்து ஈடுபட்டு வந்ததால் அண்ணாதுரையை குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்ய நடவடிக்கை எடுக்குமாறு மதுவிலக்கு பிரிவு இன்ஸ்பெக்டர் ரங்கசாமி, மாவட்ட போலீஸ் சூப்பிரண்டுக்கு பரிந்துரை செய்தார். இதுதொடர்பாக மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ராஜன் மூலம் மாவட்ட கலெக்டர் ரோகிணிக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
இந்தநிலையில், சாராய வியாபாரி அண்ணாதுரையை குண்டர் சட்டத்தில் கைது செய்யுமாறு நேற்று கலெக்டர் ரோகிணி உத்தரவிட்டார். இதையடுத்து அவரை போலீசார் குண்டர் சட்டத்தில் கைது செய்தனர். சேலம் மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ள அவரிடம் அதற்கான நகலை போலீசார் வழங்கினர்.