திருப்பூரில் விடுதி கழிவறைகளை சுத்தம் செய்யும் மாணவிகள்
திருப்பூரில் ஆதிதிராவிடர் விடுதி கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் அவலம் ஏற்பட்டுள்ளது. இது குறித்து விடுதி பெண் காப்பாளரிடம் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
திருப்பூர்,
திருப்பூர் ராயபுரம் பகுதியில் தமிழ்நாடுஅரசு பழங்குடியினர் மற்றும் ஆதிதிராவிடர் மாணவியர் விடுதி செயல்பட்டு வருகிறது. இந்த விடுதியில் 1-ம் வகுப்பு முதல் பிளஸ்-2 வகுப்பு வரை 40 மாணவிகள் தங்கி அருகில் உள்ள பல்வேறு அரசு பள்ளிகளில் படித்து வருகிறார்கள்.
இந்த விடுதியின் காப்பாளராக சங்கீதா என்பவர் பணியாற்றி வருகிறார். மேலும் சமையல் செய்யும் பணியாளராக சரோஜா, இரவு காவலராக பழனியம்மாள் ஆகியோரும் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் இந்த விடுதியில் தங்கி உள்ள மாணவிகளை கழிவறைகளை சுத்தம் செய்யச்சொல்லி மிரட்டுவதாக கூறப்படுகிறது.
இது குறித்து மாணவிகள் சிலர் கூறியதாவது:-
இந்த விடுதியில் உள்ள கழிவறைகளை சுத்தம் செய்ய வேண்டும். குப்பைகளை அள்ள வேண்டும். சாக்கடையை சுத்தம் செய்யவேண்டும், விடுதி காப்பாளரின் காரை கழுவ வேண்டும் போன்ற வேலைகளை செய்ய வேண்டும் என்று விடுதி காப்பாளர் சங்கீதா எங்களிடம் கூறுகிறார். இந்த வேலைகளை செய்யவிட்டால் மிரட்டுகிறார். எனவே நாங்கள் இது குறித்து யாரிடமும் சொல்லாமல் பயந்து கொண்டு இந்த வேலைகளை சுழற்சி முறையில் செய்து வருகிறோம்.
இங்கு தங்கி இருக்கும் ஒரு மாணவியின் உறவினர் ஒருவர் இறந்து விட்டதால் அது குறித்து தகவல் சொல்லி மாணவியை அழைத்துச்செல்ல அந்த மாணவியின் சகோதரி இங்கு வந்தார். அப்போது அந்த மாணவி உள்பட சில மாணவிகள் கழிவறைகளை சுத்தம் செய்து கொண்டிருந்ததை பார்த்து அதிர்ச்சி அடைந்தார். பின்னர் அவர் அதை தனது செல்போனில் படம் பிடித்து சென்று பெற்றோரிடம் காட்டி உள்ளார்.
இதனால்தான் இந்த பிரச்சினை வெளியில் தெரிந்துள்ளது.
இவ்வாறு மாணவிகள் தெரிவித்தனர்.
அதையடுத்து அந்த மாணவியின் பெற்றோர் குழந்தைகள் பாதுகாப்பு மையத்துக்கு சென்று கழிவறைகளை மாணவிகள் சுத்தம் செய்யும் படத்தை காண்பித்து புகார் தெரிவித்தனர். மேலும் திருப்பூர் வடக்கு போலீசிலும் புகார் கொடுத்தனர். அதைத்தொடர்ந்து குழந்தைகள் பாதுகாப்பு மைய அலுவலர்கள் மற்றும் போலீசார் விடுதிக்கு வந்து விடுதி காப்பாளிடம் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
இந்த நிலையில் பாதிக்கப்பட்ட மாணவிகளின் பெற்றோர் கூறுகையில் இந்த விடுதி காப்பாளர் மீது கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும். அவரை இங்கிருந்து இடமாற்றம் செய்ய வேண்டும். அது வரை இந்த பிரச்சினையை நாங்கள் விடப்போவதில்லை என்று தெரிவித்தனர். திருப்பூரில் விடுதி கழிவறைகளை மாணவிகளே சுத்தம் செய்யும் அவலம் ஏற்பட்டு இருப்பது பொதுமக்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
இது குறித்து மாவட்ட ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை அதிகாரி சக்திவேலிடம் கேட்டபோது “ இந்த பிரச்சினை தொடர்பாக தனி தாசில்தார் விசாரணை நடத்தி, அறிக்கை சமர்ப்பிக்க கேட்டுள்ளோம். அந்த அறிக்கை வந்ததும் மேல்நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.